அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு...

Posted By:

சென்னை: அரசுமருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்தவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிற்கான கலந்தாய்வு பொதுவாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 50% இட ஒதுக்கீடு, தனியார் கல்லூரிகளில் உள்ள 50% இடஒதுக்கீடு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு பொதுவாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு...

மருத்துவக் கலந்தாய்விற்கு இன்று முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களுக்கான இட ஒதுக்கீடு ஆகியவை பொது கலந்தாய்வின் மூலம் நிரப்பபப்படும்.

முதுநிலை மருத்துவப் படிப்பிற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு கிடையாது. அதற்குப் பதிலாக நீட் பி.ஜி தேர்வில் பெறப்படும் மதிப் பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

நீட் பி.ஜி தேர்வில் மாணவ மாணவியர்கள் பெறும் மதிப்பெண்ணைப் பொறுத்து முதுகலை மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்காக பொது கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மேலும் இதுவரை பின்பற்றப்பட்ட விதிமுறைகளே இந்த ஆண்டும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
General discussion for government, private medical colleges and Deemed Universities. Students enrolled, according to the General discussion.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia