மருத்துவ மேற்ப்படிப்புக்கான பொது கலந்தாய்வு... இன்று முதல் 11ந் தேதி வரை நடக்கிறது...!

Posted By:

சென்னை : இன்று செவ்வாய்க் கிழமை காலை 9 மணிக்கு பொது கலந்தாய்வு தொடங்கியது. கலந்தாய்வில் 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழக கிராமப்புற ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் நீட் தேர்வு எனும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு சாத்தியப்படுத்தப்பட்ட நிலையில் இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

தரவரிசை பட்டியல்

சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின்படியும், இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதல் படியும் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் www.tn.health.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

ஊக்க மதிப்பெண்


இந்த பட்டியல் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், ஊக்க மதிப்பெண்கள், பணியாற்றிய ஆண்டு ஆகியவற்றின் அடிப்படையில் கடினமான பகுதிகளில் பணியாற்றிய டாக்டர்களுக்கு அவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற வகையில் அதிகபட்சம் 30 சதவீதம் ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு கலந்தாய்வு

மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நேற்று சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடந்தது.
மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வுக்கு 11 பருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் 10 மாணவ மாணவிகள் மட்டும் வந்திருந்தனர். அவர்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்ப அரசு கல்லூரிகளை தேர்ந்து எடுத்தனர்.

பொது கலந்தாய்வு

இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு பொது கலந்தாய்வு தொடங்கியது. கலந்தாய்வில் கலந்து கொள்ள 400 பேருக்கு அழைபபு விடுக்கப்பட்டு உள்ளது. 11ந் தேதி கலந்தாய்வு முடிவடைகிறது என இந்த கலந்ததாய்வு குறித்து மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

English summary
general counseling started on Tuesday morning at 9am. 400 people have been called in the consultation.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia