"கேட்" தேர்வு முடிவுகள் வெளியானது!

2017ஆம் ஆண்டிற்கான கேட் தேர்வு முடிவுகள் இன்று 27.03.2017 இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை : கேட் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வாகும். இளங்கலை பொறியியல், தொழில் நுட்பம், கட்டிடக்கலை மற்றும் முதுகலை அறிவியல் சம்பந்தப்பட்ட படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படுகிறது.

கேபினட் செகரட்டேரியட், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பதவிகள் பெறுவதற்கும் கேட் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தகுதியாகக் கொள்ளப்படுகிறது.

கேட் தேர்வினை மத்திய அரசின் மனிதவளத் துறையின் கீழ் செயல்படும், நேஷனல் கோ ஆர்டினேசன் போர்டு, இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்சஸ் நிறுவனம், பெங்களூர், மும்பை, டெல்லி, கெளஹாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்க்கி ஆகிய 8 இடங்களில் செயல்படும் IIT நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. 2017ம் ஆண்டிற்கான கேட் தேர்வுக்கான பிரதானப் பொறுப்பை ரூர்க்கி ஐஐடி பெற்றுள்ளது.

கேட் தேர்வு 04.02.2017, 05.02.2017, 11.02.2017, 12.02.2017 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதற்கான முடிவுகளை இந்திய தொழில்நுட்பக்கழகம் (ஐஐடி) ரூர்க்கி இன்று 27.03.2017 இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 5 மே 2017ம் தேதி வரை இந்த முடிவுகள் இணையதளத்தில் இருக்கம். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். கேட் தேர்வு மதிப்பெண்கள் மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேட் தேர்வு முடிவினை www.gate.iitr.ac.in, www.gate.iitr.ernet.in என்ற இணையதள முகவரியில் சென்றுப் பார்க்கவும்,

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Indian Institute of Technology (IIT) Roorkee has announced 2017 Gate exam result today.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X