கேட் (GATE) தேர்வு தகுதிகள் தெரியுமா?

Posted By:

சென்னை : கேட் தேர்வு இளங்கலை பொறியியல், தொழில் நுட்பம், கட்டிடக்கலை மற்றும் முதுகலை அறிவியல் சம்பந்தப்பட்ட படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படுகிறது. இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஏழு இந்திய தொழில் நுட்பக் கழகங்களும் இணைந்து கேட் தேர்வினை நடத்துகிறது.

கேட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் -

பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் ஆராய்ச்சி ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் கேட் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இளநிலை பட்டப்படிப்பில் 50% மார்க்குகள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் மற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

கேட் (GATE) தேர்வு தகுதிகள் தெரியுமா?

இளநிலை இறுதி ஆண்டு பயில்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அறிவியல், கணிதம் புள்ளியியல், கணிணி பயன்பாடுகள், ஒருங்கிணைந்த படிப்புகள்
ஆகிய பிரிவுகளில் முகலைப் பட்டம் பெற்றவர்களும் கேட் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். முதுகலைப் பட்டப்படிப்பில் 50% மார்க்குகள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முதுகலை இறுதி ஆண்டு பயில்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கேட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை -

கேட் தேர்வு எனப்படும் பொறியியல் பட்டதாரி திறனறி தேர்வு இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஏழு இந்திய தொழில் நுட்பக் கழகங்களும் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான தேர்வாகும். கேட் தேர்வு ஐஐஎஸ்சி மற்றும் ஐஐடிக்கள் போன்ற தொழிற் நுட்பக் கல்லூரிகளில் எம்டெக், எம்இ மற்றும் பிஹெச்டி போன்ற மேற்படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் தேர்வாகும்.
விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்யவும்.

புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் நெட் பேங்க் மூலம் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தலாம் அல்லது பேங்க் செல்லானைப் பயன்படுத்தியும் கட்டணம் செலுத்தலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தினை நன்கு சரிப்பார்த்து விட்டு சமர்ப்பிக்கவும்.

ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் வழக்கு மண்டல கேட் அலுவலகங்களை தொடர்வு கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம் -

ஜெனரல் பிரிவினர், ஓபிசி பிரிவினர் மற்றும் ஆண்களுக்கு rs.1500/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு rs.750/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கேட் தேர்வு முறை -

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தனிப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். ஐஐடியால் இதற்கென தனியாக கலந்தாய்வு ஏதும் நடத்தப்படவது இல்லை. ஆனால் என்ஐடிஸ் அட்மிஷன் போது சென்ட்ரலைஸ்டு கலந்தாய்வினை நடத்துகிறது. இந்த கலந்தாய்வு எம்டெக் மற்றும் எம்பிளேன் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படுகிறது.

கேட் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் சென்ட்ரலைஸ்டு கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

English summary
The candidates who are applying for Graduate Aptitude Test for Engineering (GATE) have to know the eligibility criteria to apply for the examination.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia