பொறியியல் பட்டதாரி ஆப்டிட்யூட் டெஸ்ட் (GATE) 2022 அதிகாரப்பூர்வ இணைதளத்தின் செயல்பாடு தடைபட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கேட்-யின் அதிகாரப்பூர்வ இணைதளமான gate.iitkgp.ac.in இயங்கி வரும் நிலையில், அதில் "Apply Online" தளம் மட்டும் இயங்கவில்லை.

கேட் 2021 தேர்வு இணையதளத்தின் விண்ணப்பிப்பதற்கான தளத்தினை தேர்வு செய்யும் போது அது "503 சேவை கிடைக்கவில்லை" என்ற செய்தியை காட்டுகிறது.
தற்செயலாக, இன்று, செப்டம்பர் 24, 2021, தாமதமான கட்டணம் ஏதுமின்றி கேட் 2022 தேர்வுக்கு பதிவு செய்ய கடைசி நாளாகும். இருப்பினும், இணையதளம் வேலை செய்யாததால், பதிவு காலக்கெடு நீட்டிக்க அதிக வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

GATE 2022 503 சேவை கிடைக்கவில்லை
ஒரு வலைத்தளம் வேலை செய்யாதபோது அல்லது சர்வர் செயலிழந்தால் இந்த பிழை செய்தி வரும். இணையதளம் சரியாக செயல்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், GATE 2022 இல், சர்வர் செயலிழக்க சாத்தியமான காரணங்கள் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தியது அல்லது இணையதளம் பராமரிப்பில் உள்ளதாகும்.

இன்றே கடைசி நாள்
இவை இரண்டுமே நியாயமான காரணங்கள். இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், தேர்வுக்கு பதிவு செய்ய இன்று கடைசி நாளாகும். பல விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை அணுக தொடர்ந்து முயற்சித்தும் பலனில்லை. எனவே, விண்ணப்பிபதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாவிட்டால் சிரமங்கள் அவர்களுக்கு ஏற்படும்.

காலக் கெடு நீடிக்குமா?
தற்போது ஏற்பட்டுள்ள இந்த இடையூறு காரணமாக கேட் தேர்விற்கு விண்ணப்பிக்க காலக் கெடு நீட்டிக்க வாய்ப்புள்ளது. தாமதமான கட்டணம் இல்லாமல் பதிவு செய்வதற்கான காலக்கெடு குறைந்தது 1-2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த குழப்பம் ஏற்படும் போது, இது தொடர்பான ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் அல்லது புதுப்பிப்புகளுக்கு வேட்பாளர்கள் அடிக்கடி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐஐடி-யில் காலக் கெடு நீட்டிப்பு
இதேப் போன்று கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) டெல்லிக்கு கேட் 2020 ஐ நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது, தாமதமான கட்டணம் இல்லாமல் தேர்வுக்கு பதிவு செய்ய கடைசி தேதி செப்டம்பர் 24, 2019. எனினும், இணையதளம் செப்டம்பர் 11, 2019 அன்று வேலை செய்யவில்லை. தொடர்ந்து, அதிகாரிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை இரண்டு நாட்கள் நீட்டித்தனர், அதாவது செப்டம்பர் 26, 2019 வரை நீட்டித்து அறிவித்தனர்.