சென்னை: பொறியியல் பட்டதாரி தகுதி (கேட்) தேர்வுக்கான நுழைவுக் கூடச் சீட்டுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அறிவியல், பொறியியல் பிரிவுகளில் உயர்கல்வி படிப்பதற்காக உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் தேர்வு கேட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வுகள் ஜனவரி 30, 31-ம் தேதி, பிப்ரவரி 6, 7-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் http://www.gate.iisc.ernet.in என்ற இணையதளத்துக்குச் சென்று டவுன்லோடு அட்மிட் கார்டு என்ற பகுதியை கிளிக் செய்யவேண்டும்.
பின்னர் என்ரோல்மண்ட் நம்பர், ஐடி கார்டு, பாஸ்வேர்டு ஆகியவற்றைத் தரவேண்டும். இதைத் தொடர்ந்து நுழைவுக் கூடச் சீட்டுகள்(அட்மிட் கார்டு) கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் தோன்றும். அதை பிரிண்ட்-அவுட் எடுத்து வைத்துக் கொண்டு தேர்வுக்கு வரும்போது கொண்டு வரவேண்டும்.
இந்தத் தேர்வுக்கான விடைகள் மார்ச் 19-ம் தேதி வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications

