அகிம்சையின் திருவுருவம் அண்ணல் காந்தி பிறந்த தினம் இன்று

Posted By:

இன்று இந்திய விடிவெள்ளியாக கருதப்படுபவர் தேசத்தின் தந்தையாக அழைக்கப்படும் அண்ணல் காந்தியின் பிறந்ததினம் .

நாடெங்கும் அவருடைய பிறந்ததினம் அனுசரிக்கப்படுகிறது . அகிம்சை வழியை போதித்து நாடெங்கிலும் சுதந்திர போராட்டத்தை பரவச் செய்தார் . நாட்டு மக்களிடையே மிகுந்த தேசப்பற்றை எழச்செய்த பெருமை இவருக்கென்றும் உண்டு .

காந்திய கொள்கைகளால் முகவரி கொண்ட தேசம்

1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் கரம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய்க்கு மகனாக குஜாராத் போர்பந்தரில் பிறந்தவர் காந்தி மகாத்மா . வணிக குடும்பத்தில் பிறந்த காந்தி தென்னாப்பிரிக்காவில் சட்டம் பயின்றார். இனப்பாகுபாட்டை எதிர்த்து தனது முதல் போராட்டத்தை காந்தி தென்னாப்பிரிக்காவில் தொடங்கினார் .

பத்தொன்பதாம் நூற்றாண்டில் காந்தி இந்தியா வருகைபுரிந்தார் சம்பரான் போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு சாதகமாக போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
நாட்டு மக்களிடையே சிறந்த செல்வாக்கு பெற்றார் ,
இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுப்படுத்தி வெற்றி கொண்டார் . காந்தியின் ஈர்ப்பு அனைவருக்கும் எழுச்சியூட்டியது .

ஒத்துழையாமை இயக்கம் :

ரௌலட் சட்டத்தை மக்கள் எதிர்த்து அமைதி போராட்டத்தை நடத்திய மக்களுக்கு எதிராக எந்தவித முன்னறவிப்பும் இன்றி ஜாலியன் வாலாபாக்கில் ஆங்கிலேயர் நடத்திய துப்பாக்கி சூட்டை எதிர்த்து கண்டித்து  நாடு முழுவதும் அகிம்சையில் ஒத்துழையாமை போராட்டத்தை துவக்க 1920  காந்தி  உந்துதலாக இருந்தார்,

சுதேசிக்கு ஆதரவு வழங்கி விதேச பொருட்களை புறக்கணித்தல், இராட்டை சுற்றுதல் போன்ற தேசிய உற்பத்தியை ஆதரிக்கவும் ஆங்கியலேயருக்கு ஒத்துழைக்க மறுத்து  மாணவர்கள், வழக்கறிஞர்கள் அனைவரும் புறக்கணிக்கவும் நாடு முழுவதும் கோசங்களும் அமைதி போராட்டமும் பெருகியது . காந்தி என்னும் தனிமனித போராட்டம் மக்களை ஒன்று திரட்டியது .

சட்டமறுப்பு இயக்கம் :

வட்டமேஜை மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு எந்த வித மாற்றமும் வராத்தால் சட்டமறுப்பு இயக்கம் கடைப்பிடிக்கப்பட்டது 1932 . ஆங்கில பொருட்களை புறக்கணித்தல், பிரிட்டிஸ் பொருள் விற்பனை நிலையங்கள் முன் மறியல் செய்யப்பட்டன . வரி கொடா போராட்டங்களும் , வனச்சட்டங்களை மீறுதல் போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டன. அகிம்சை போராட்டத்தில் சட்டம்றுப்பு இயக்கங்கள் ஆங்கிலேயரால் வண்மையாக ஒடுக்கப்பட்டன.

உப்புக்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து 1930 இல் நடத்தப்பட்ட தண்டியாத்திரை அதாவது தடையை மீறி உப்பெடுத்தல் போராட்டத்தில் ஒட்டுமொத்த தேசமும் ஒன்று திறண்டு போராடியது நாட்டு மக்களை எழுச்சியடைச் செய்தது .

செய் அல்லது செத்துமடி என்று வெள்ளையனை வெளியேற காந்திவிடுத்த போராட்ட குக்கூரல் மக்களிடையே இருந்த சுதந்திர தாகத்தை நிலைநிறுத்தச் செய்து   போராட வைத்தது . அகிம்சையொன்றை ஆயுதமாக கொண்டு தனிமனித எல்லைப்படையாக தேசம் பிரிவிணை அடைந்த போது நவகாளியில் இந்து முஸ்லீம் பிரிவிணைகளை தடுக்க தனிமனிதனாக சென்றார.

ஆர்பரிக்கும் ஆறடி உயரமோ  அஜானுபாவான உடல்வாகு  கொண்டவர் இல்லை காந்தி , காந்தி அறையாடை பக்கிரி என்று அழைக்கப்பட்டவர் ஆடம்பரம் விடுத்து வாழ்ந்தவர் சத்தியமாய் வாழ்ந்தவர் சத்திய சோதனையை விடுத்து சென்றார் அவரின் கொள்கைகள் தான் இந்திய அடையாளமாய் இன்னும் இருக்கின்றன . இதுவே காந்தியின் சாதனையாகும் இந்நாளில் காந்தியை நினைவு கூறுவோம் அவருடைய கொள்கையை கைக்கொண்டு வாழ்ந்து உலகிற்கு முன்னுதராணமாய் திகழ்வோம் .

சார்ந்த பதிவுகள் :

செய் அல்லது செத்துமடி, ஜெய்ஹிந்த் இரண்டும் 75 வருடங்களை கடந்து நிற்கிறது 

சுதந்திரதின கொண்டாட்டமுறைகள் நாட்டுமக்களின் ஆர்வம் !!!

English summary
above article contained about Gandhi and his policy

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia