பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கல்வி புரட்சி , கட்டணமில்லா கல்வி

Posted By:

அண்ணச்சத்திம் ஆயிரம் கட்டல் ,ஆலயம் பதினாராயிரம் கட்டல் இவற்றைவிட ஒரேழைக்கு எழுத்தறிவித்தல் சிறந்த புண்ணியம் ஆகும்

என்ற பாரதியாரின் வரிகளுக்கு பாரதத்தில் உயிர் கிடைத்து வருவது பெருமிதப்படுத்துகிறது . 
பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கல்வி புரட்சி , கட்டணமில்லா கல்வி பெண் குழந்தைகள் படிக்க அதிக முக்கியத்துவம் .

பஞ்சாபில் கல்வியில் ஒரு புரட்சி பெண் கல்விக்கு முக்கியத்துவம் இந்த கல்வியாண்டு முதல் வழங்கப்படுகின்றது .
பஞ்சாபில் பிரைமரி கல்வி முதல் பிஹெச் டி கல்வி வரை கல்வி கட்டணமின்றி படிக்கலாம் என பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்தார் .
2017 இந்த கல்வியாண்டு முதல் அரசு கல்லுரிகளில் பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது .
13 ஆயிரம் தொடக்கப்பள்ளி , 48 அரசுபள்ளிகளில் இலவச வை-பை வசதி.
ஆங்கிலம் கற்க சிறப்பு திட்டங்கள் தீட்டபட்டு அடுத்தமாதம் அறிவிக்க முடிவு . மேலும் பெண்களுக்கு ஊராட்சி தேர்தலில் பங்கேற்க 50% சதவீகித ஒதுக்கீடு வழங்கி அரசு அறிவிப்பு வெளியிட்டது

அரசு கல்லுரிகளில் இந்தாண்டு முதல் பெண்களுக்கு இலவச கல்வி , வை-பை வசதிகள் செய்ய அரசுதிட்டம்


தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு இலவச கல்வியும் மதிய உணவு கொடுத்தார் காமராசர் . அதேபோல் பஞ்சாபிலும் கல்வி மாற்றங்கள் நிகழ்வது அதுவும் அடிப்படை கல்வி முதல் ஆய்வு கல்வி வரை இலவசக்கல்வி வழங்குதல் என்ற அறிக்கையின் மூலம் கல்வியின் அவசியமும் அதன் முக்கியத்துவமும் பெருகி வருவதுடன் அத்தகைய மதிப்புமிக்க கல்வியை கற்க அரசு வாய்ப்பு வழங்குவது சிறப்பு அம்சம் ஆகும் .

English summary
here article mentioned about punjab free education announcement

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia