சம்பளத்துடன் உற்சாகத்தையும் அள்ளித் தரும் “ப்ரீலேன்சிங்” வேலைவாய்ப்புகள்!

Posted By:

சென்னை: ப்ரீலேன்சிங்... இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று இது. எந்த நேரத்திலும் பணி செய்யலாம். ஆனால் வேலையை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

நெரிசலான நகர்ப்புற வாழ்க்கையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவசர அவசரமாக புறப்பட்டு அலுவலகம் வந்து ஒரேமாதிரியான சூழ்நிலையில் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றி பின்னர் மாலையில் மீண்டும் புறப்பட்டு நெரிசலில் சிக்கி வீட்டிற்கு செல்வதை வெறுக்கும் நபர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்தான் ப்ரீலேன்சிங் பணி.

சம்பளத்துடன் உற்சாகத்தையும் அள்ளித் தரும் “ப்ரீலேன்சிங்” வேலைவாய்ப்புகள்!

ப்ரீலேன்ஸ் பணியின் மூலம் ஒருவர் தன்னை நன்கு உற்சாகப் படுத்திக் கொள்ள முடிகிறது. தனது பிற சொந்த வேலைகளையும் பார்த்துக்கொண்டு அலுவலகப் பணியையும் மேற்கொள்ள முடிகிறது. இதனால் தேவையற்ற மனஉளைச்சல் தவிர்க்கப்படுகிறது.

ப்ரீலேன்ஸ் பணி முறையானது. இந்தியாவில் இன்னும் பெரியளவில் வளர்ச்சியடையவில்லை என்றாலும் அடுத்த சில வருடங்களில் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு சந்தையில் பல்வேறு விதமான ப்ரீலேன்ஸ் வாய்ப்புகள் உள்ளன. வெவ்வேறு வகையான நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான குறிப்பிட்ட திறனுள்ள ப்ரீலேன்ஸ் பணியாளர்களை எதிர்பார்க்கின்றன.

ப்ரீலேன்ஸ் பணிசெய்ய விரும்புபவர்கள் www.freelanceindia.com போன்ற ஆன்லைன் பாரம் மூலமாக தங்களின் விபரங்களைப் பதிவுசெய்து கொள்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு பணி வழங்குனர்களின் தொடர்பு கிடைக்கிறது.

கொடுத்தப் பணியை திருப்தியாக செய்வதன் மூலமாக பணிவழங்குநர்கள் எதிர்காலத்தில் தாங்களே நேரடியாக ப்ரீலேன்ஸ் பணியாளர்களைத் தொடர்பு கொள்கிறார்கள்.

ப்ரீலேன்சிங் பணியை ஒருவர் படிப்பை முடித்தப் பிறகுதான் மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. படிக்கும்போதே சம்பாதித்து சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பைப் பெறலாம். இதன் மூலம் ஒரு மாணவரின் தன்னம்பிக்கை வளர்கிறது.

படைப்புத்திறன் தொழில்நுட்பத் திறன் மற்றும் இலக்கியத்திறன் உள்ளவர்களுக்கு ப்ரீலேன்ஸ் துறையில் பல பணிவாய்ப்புகள் நிறைந்து கிடக்கின்றன.

ப்ரீலேன்ஸ் பணியின் மூலம் ஒருவருக்கு நிறைய அனுபவமும் கிடைக்கிறது. இப்பணியைப் பொறுத்தவரை இன்னொரு நன்மை என்னவெனில் சீனியர் - ஜூனியர் என்ற வேறுபாடுகள் இருப்பதில்லை. ஒருவரின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்கு ப்ரீலேன்சிங் பணிவாய்ப்புகள் உதவிபுரிகின்றன.

முன்பே குறிப்பிட்டதுபோல குறிப்பிட்ட ஆன்லைன் forum களில் பதிவுசெய்து வேலை வழங்குநர்களைக் கண்டறியலாம். அதேசமயம் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் மூலமாகவும் ப்ரீலேன்ஸ் பணிவாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன. பணிவழங்குநர்களைத் திருப்திபடுத்தும் ப்ரீலேன்சர்களின் காட்டில் எப்போதும் மழைதான்.

English summary
Great way to make more money is to go freelance. As an added benefit, it's also a beneficial way to practice your passion. Here are some tips for making it happen.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia