டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்களுக்கு இலவசப் பயிற்சி!

Posted By:

சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் எழுதுபவர்களுக்கு சென்னையில் இலவசப் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஏற்பாடு செய்துள்ளார்.

சென்னை அசோக்நகர், நூறடி சாலையில் திருமா பயிலகம் இயங்கி வருகிறது. இந்தப் பயிலகத்தில் கட்டணம் ஏதுமின்றி அரசுத் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கட்டணமில்லா வகுப்புகள் கடந்நத சில ஆண்டுகளாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்களுக்கு இலவசப் பயிற்சி!

திருமா பயிலகத்தில் பயின்ற பலர் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். அரசுப் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் இந்த இலவச பயிற்சி நிலையத்தில் இணைந்து பயிற்சிப் பெற்று வெற்றி பெறலாம். போட்டித் தேர்விற்காக பலர் விண்ணப்பிப்பார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே முறையாக பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று படித்து போட்டித் தேர்வுகளுக்காக தயாராகுவார்கள். ஒரு சிலருக்கு பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் அதற்கான வசதிகள் இருக்காது.

அவர்களுக்காகவே திருமா பயிலகம் இலவசப் பயிற்சியினை அளிக்கிறது. விருப்பமும் போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டும என்ற எண்ணமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சி நிலையத்தில் இணைந்து பயிற்சி பெறலாம். அனுபவம் மிக்க பயிற்சியாளர்களைக் கொண்டு போட்டித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

திருமா பயிலகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு, சீருடைப் பணியாளர்கள் தேர்வு மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஆகியவற்றிற்காக இலவச பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. சென்னை வாசிகளே இந்தப் இலவச பயிற்சி நிலையத்திற்குச் சென்று பயிற்சி பெற்று வெற்றி பெறுங்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

திருமா பயிலகத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிற்கு உடனே தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளுங்கள். டோன்ட் மிஸ் இட்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் - 9751669931 மற்றும் 9952860844.

English summary
viduthalai chiruthaigal katchi leader Thirumavalavan has announced that Free training classes for the government exam candidates at ashok nagar.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia