எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களே... இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க!

Posted By:

சென்னை: எஸ்., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சியை மத்திய அரசு வழங்குகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசின் பயிற்சி மற்றும் வழிகாட்டும் மையத்தின் உதவி மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி பி.கே மொகந்தி கூறியதாவது:

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டிடம், 3வது தளம், எண் 56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை - 600004. தொலைபேசி-044 24615112 என்னும் முகவரியில் இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு(DGE & T) பிரிவின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் இயங்கி வருகிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் இலவச பயிற்சி மற்றும் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களே... இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க!

நடப்பு கல்வியாண்டில் மையததின் 8-வது இலவச மற்றும் ஊக்கத்தொகையுடன் கூடிய சிறப்பான 'O' லெவல் கம்ப்யூட்டர் மென்பொருள்('O' Level Computer Software) 1 வருட கால பயிற்சியை 1 ஜூலை 2015, முதல் தகுதி வாய்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக இந்த மையம் நடத்தவிருக்கிறது.

வேலைவாய்ப்பில் கணினிக்கு இருக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு இதில் பங்கு பெறுகிறவர்களுக்கு 'O' லெவல் கம்ப்யூட்டர் மென்பொருள் கோர்ஸில் சிறப்பான முறையில் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் பங்கு பெறுகிறவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒரு மாதத்திற்கு ரூ.500/- அளிக்கப்படும்.

வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துள்ள கணினி பாடம் படித்திராத, +2 மற்றும் அற்கு மேலும் கல்வித்தகுதி பெற்றவர்கள், 30 ஜூன் 2015 தேதியன்று 18-லிருந்து 30 வரை வயதினை கொண்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இந்த பயிற்சி முகாமிற்கு ஜூன் 25.06.2015-க்குள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய இலவச விண்ணப்பங்களை எந்தவித கட்டணமுமின்றி 25.06.2015-வரை(காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை) இந்த மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 25.06.2015.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை இருப்பின், வேலை வாய்ப்பு மைய பதிவு அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள இரண்டு புகைப்படங்களை இணைக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கான நேர்காணல் நடைபெறும் தேதிகள் 26.6.2015 மற்றும் 29.06.2015.

நேர்காணலில் பங்கு பெறும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது என அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Free job oriented courses for SC, ST students has been conducted by DGE & T centre which is s part of Central Government.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia