திருநங்கைகளுக்கு இலவச பட்டப்படிப்பு... உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அதிரடி அறிவிப்பு

Posted By:

சென்னை : இன்று பேரவையில் நடந்துகொண்டிருக்கும் உயர்க்கல்வி மானியக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு ரூ. 3000/- மாதந்தோறும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். திருநங்கைகளுக்கு இலவசமாக கல்லூரி படிப்பினை வழங்க திட்டமிடப் பட்டுள்ளது.

நெல்லையில் சிறந்து விளங்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் திருநங்கையர்கள் இலவசமாக கல்வி கற்கலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

திருநங்கைகளுக்கு இலவச பட்டப்படிப்பு... உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அதிரடி அறிவிப்பு

கடடாய பள்ளிக்கல்வி அனைவருக்கும் வழங்கப்படுகின்ற இன்றையக் காலக்கட்டத்தில் உயர்கல்வி என்பது இன்னும் பலருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. அதிலும் 3ம் பாலினத்தவர்களுக்கு பள்ளிப்படிப்பு மற்றும் உயல்கல்வி வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அதை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இலவச கல்லூரி படிப்பு திருநங்கைகளின் வாழ்க்கையை வளமுள்ளதாக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த அறிவிப்பினால் திருநங்கைகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 3வது பாலினத்தவர் என அழைக்கப்படும் திருநங்கைகளும் கல்வியில் சிறந்து விளங்க ஒரு வாய்ப்பினை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் வரவேற்க்கத்தக்க ஒன்றாகும்.

கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க திருநங்கைகளும் பட்டப்படிப்புகளை இலவசமாகப் படித்து தங்கள் வாழ்வில் முன்னேற வழி செய்து தந்துள்ளது தமிழக அரசு.

கற்றாருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல திருநங்கைகளும் தங்கள் வாழ்வினை சிறப்பாக அமைத்துக் கொள்ள வழி உருவாக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி என்பது இன்றையக் காலக்கட்டத்தில் எளிதாகப்பட்டிருக்கிறது. வரவேற்கத்தக்கது.

English summary
Higher Education Minister Anbalagan told that For transgender performances in education, Rs. 3000 will be provided every month.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia