முஸ்லிம் அமைப்பு நடத்தும் இலவச ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி... முஸ்லிம் அல்லாதோரும் பங்கேற்கலாம்!

Posted By:

சென்னை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை எழுத இலவசப் பயிற்சியை முஸ்ஸிம் அமைப்பு வழங்குகிறது. இதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை www.akias.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடத்தப்படுகிறது.

முஸ்லிம் அமைப்பு நடத்தும் இலவச ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி... முஸ்லிம் அல்லாதோரும் பங்கேற்கலாம்!

இது தொடர்பாக "அழகிய கடன் ஐஏஎஸ் அகாதெமி'யின் தலைவர் மௌலானா ஷம்சுதீன் காஸிமி தெரிவித்துள்ளதாவது:

இந்திய இஸ்லாமிய எழுத்தறிவு இயக்கம் (இல்மி) நடத்தும் "அழகிய கடன் ஐஏஎஸ் அகாதெமி' சார்பில், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளித்து வருகிறது.

15 மாணவிகள், 60 மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், புத்தகங்கள், தரமான பயிற்சி உள்பட அனைத்தும் எந்தக் கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த மையத்தில் பயின்ற முதல் குழுவிலேயே ஒரு மாணவர் யுபிஎஸ்சி தேர்விலும், 25 மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி போன்ற மத்திய, மாநில அரசு பணித் தேர்வுகளிலும் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர்.

இந்த அமைப்பு தன்னுடைய பணியை விரிவுபடுத்தும் வகையில், இந்த ஆண்டு முதல் சிறுபான்மை முஸ்லிம்கள் மட்டுமன்றி அனைத்து மதங்களையும் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்களுக்கு போட்டித் தேர்வுப் பயிற்சிகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

இதற்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

இந்த நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம் என்றார் அவர்.

English summary
Azhagiya kadan IAS Academy in Chennai has arranged free coaching for IAS, IPS exams. people who wants to join this coaching logon into www.akias.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia