போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

Posted By:

சென்னை : சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகிறது என்ற தவலை சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச் செல்வன் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), சாந்தோம், சென்னை - 4ல் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மாணவ மாணவிகளின் நலன் கருதி இந்த இலவச பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.

போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.எஸ்.யு.ஆர்.பி) நடத்தும் காவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

காவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெறுகிறது.

இந்தப் போட்டித் தேர்வுக்கு தயாராக இருக்கும் சென்னை மாவட்டத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொள்ளலாம்.

போட்டித் தேர்விற்கு தயாராக இருக்கும் சென்னை மாவட்ட விண்ணப்பதாரர்கள் பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொள்வதற்கு தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் உரிய கல்வி சான்றிதழ்களுடன் சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தை அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.

English summary
Uniform Employee Recruitment conduct a free training classes for Competitive exam for police work. Eligible candidates can join this free class.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia