ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளில் வெற்றிபெற பொகாரோ மாணவர்களுக்குப் பயிற்சி!!

Posted By:

சென்னை: ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்டவற்றில் எளிதில் சேர முடியும்.

ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளில் வெற்றிபெற பொகாரோ மாணவர்களுக்குப் பயிற்சி!!

இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க பொகாரோ மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அங்குள்ள ராம்ருத்ரா மேல்நிலைப்பள்ளியில் இலவச வகுப்புகளைத் தொடங்கவுள்ளது.

இந்தப் பயிற்சிக்காக 41 மாணவர்கள் தேர்வு செய்யப்படடுள்ளனர். இதுகுறித்து பொகாரோ மாவட்ட ஆட்சியர் ராய் மஹிமாபத் ரே கூறியதாவது: நிபுணர்களின் உதவியோடு இந்த மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும். அவர்களுக்கு இலவசப் புத்தகங்கள் வழங்கப்படும். தேர்வில் வெற்றி பெற்று ஐஐடிகளில் சேரும் மாணவர்களுக்கு புத்தகங்கள், கட்டணத்தையும் நாங்களே செலுத்த முடிவு செய்துள்ளோம். நல்ல உள்ளம் கொண்ட சில பெரிய மனிதர்கள் இதற்கு இசைந்துள்ளனர்.

வாரத்தில் 2 நாள்கள் பயிற்சி நடைபெறும். என்றார் அவர்.

English summary
The district administration has come up with a noble initiative - to provide free coaching to underprivileged students of government schools who are looking to crack IIT-JEE and other medical and engineering examinations.The coaching classes will be organized at Ramrudra High School in Chas from this week.The project is the brainchild of Bokaro DC Rai Mahimapat Ray. He had already ordered that preliminary tests for class XI students, who aim to appear for IIT-JEE and medical exams in 2017-18, be conducted in government high schools of Kasmar, Chandankyari, Jaridih and other blocks of the district.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia