சென்னை: பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலெஜாண்ட்ரோ டோலடோவுக்கு மனித நல்லிணக்க விருதை கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ் (கேஐஎஸ்எஸ்) கல்வி நிறுவனம் வழங்கியது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைந்துள்ள கலிங்கா கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் இந்த விருதை பிரபலமானவர்களுக்கு வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்த ஆண்டு இந்த விருதுக்கு பெரு முன்னாள் அதிபர் டோலடோ தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் புவனேஸ்வரில் நடைபெற்ற விழாவில் இந்த விருதை கேஐஎஸ்எஸ் நிறுவனர் டாக்டர் அச்சுதா சமந்தா, தலைவர் சாஸ்வதி பால் ஆகியோர் டோலடோவுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான பெரு தூதர் ஜே.ஜே. கில்லர்மோ பெட்டன்கோர்ட் ரிவேரா, தூதரக அதிகாரி கார்லோ் ஜிமென்ஸ் கில் போர்ட்டோல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வறுமை பாதித்த மக்களின் வழிகாட்டியாக விளங்கும் டோலடோவுக்கு இந்த விருதை வழங்குவதில் பெருமை கொள்கிறோம் என்று டாக்டர் அச்சுதா சமந்தா விழாவில் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications












