சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஜி. சேரணுமா... விண்ணப்பிக்க ஜூன் 20 வரை டைம் இருக்கு!

Posted By:

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் நேரடியாக சேர்ந்து பயில சேர விருப்பம் இல்லாத மாணவ, மாணவிகளைப் பார்க்க முடியாது. அதுவும் எம்.பில், முதுநிலைப் பட்டப் படிப்பு பயில மாணவர்கள் அதிகம் விருப்பப்படுவார்கள்.

அவர்கள் முதுநிலை பட்டப் படிப்பு பயில்வதற்கான கால அவகாசத்தை சென்னை பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஜி. சேரணுமா... விண்ணப்பிக்க ஜூன் 20 வரை டைம் இருக்கு!

இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் முதுநிலை படிப்புகளில் சேர விரும்புபவர்களுக்கு வரும் 20-ம் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றவர்கள் 20-ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துவிட வேண்டும். முதுநிலை படிப்புகள், எம்.பில் படிப்புகளுக்காக மட்டும் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Form submission date has benn extended in Madras University for P.G. courses and M.phil Courses. Students can submit the P.G. courses forms by june 20.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia