இந்திய வன அலுவலர் பணி தேர்வு முடிவு வெளியீடு

Posted By:

சென்னை : இந்திய வன அலுவலர் பணி தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதற்கான நேர்முகத் தேர்வுகள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 16 வரை நடந்து முடிந்நது. நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில் நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் படித்த 7 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய தேர்வு பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் போன்ற பணிகளுக்கான சவில் சர்வீஸ் தேர்வினை நடத்தி வருகிறது. அத்துடன் வனத்துறை அலுவலர் (ஐ.எப்.எஸ்) தேர்வையும் நடத்தி வருகிறது.

இந்திய வன அலுவலர் பணி தேர்வு முடிவு வெளியீடு

கடந்த ஆண்டு 110 வனத்துறை அலுவலர் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டனர். முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற 330 பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டனர்.
அதிலிருந்து 110 பேர் பணியில் அமர்த்தப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் நேற்று வெளியானது.

ஐ.எப்.எஸ் தேர்வினை தமிழகத்தில் இருந்து அநேகர் எழுதினர். அதில் சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் படித்த 7 மாணவர்கள் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மற்றும் ஐ.எப்.எஸ் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளைக் கொண்டு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. திறமைமிக்க அதிகாரிகளைக் கொண்டு நடத்திய பயிற்சி வகுப்புகளின் மூலம் (ஆர்.கவுதம், பி.கார்த்திக், எஸ். ஆனந்த், பி.ஜெகதீசுவரன், பி.சித்தார்த்தா, என்.நந்தகுமார், எம்.இளையராஜா) ஆகிய 7 மாணவர்கள் வனத்துறை அலுவலர் (ஐ.எப்.எஸ்) பணிக்கு தேந்தெடுக்கப்பட்டனர்.

பி.ஜெகதீசுவரன் செங்கல் பட்டு சப்-கலெக்டர் ஜெயசீலனின் தம்பி. அண்ணன் தம்பி இருவரும் மனித நேய மையத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சைதை துரைசாமி மனித நேய மைத்தில் பயிற்சி பெற்று சிவில் சர்வீஸ், தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகள் மற்றும் போலீஸ், சப் இன்ஸ்பெக்டர் தேர்வுகள் ஆகிய தேர்வுகளை எழுதி 2,831 பேர் தேர்ச்சி பெற்று தேசிய அளவிலும், மாநில அளவிலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

English summary
Indian forest officers exam result 2017 declared. 110 peoples are selected. 7 peoples in the centre of the saidai duraisamy's manidha naeyam Ias academy.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia