பள்ளி மாணவர்களுக்கு ஒன்றியம் முதல் மாநிலம் வரை நுண்கலை போட்டிகள் !!

Posted By:

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கலைத்திருவிழா நடைபெறுகிறது மாணவர்களுக்காக நடத்தப்படும் கலைத்திருவிழாவில் மொத்தம் 150 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் தனித்திறன் வெளிப்படுத்த வாய்ப்பு அளித்துள்ளது.

பள்ளிகளில்  நுண்கலை போட்டி  நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம்

அரசு பள்ளிகளில் நான்கு பிரிவுகளாக பிரித்து மாணவர்களுக்கான ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் மற்றும் ஆறு முதல் 8 வகுப்பு அத்துடன் 9, 10 பிரிவுகளுடன் 11, 12 வகுப்புகள் என நான்கு பிரிவாக பிரித்து கலை, நுண்கலை பிரிவுகளில் மொத்தம் 150 பிரிவுகளில்      மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிக்க வேண்டும் .

கல்விகூடங்களில் மாணவர்களை நான்கு பிரிவுகளாக பிரித்து ஒன்றியம் , வட்டம் , மாவட்டம் , மாநில அளவில் மாணவர்கள் போட்டியிட வைக்க வேண்டும் அந்தந்த பகுதியில் வெல்வோரை அடுத்தடுத்து  பிரிவுக்கு   வெல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு படிப்படியாக ஒன்றியம் முதல் மாநிலம் வரை வெல்லும் மாணவர்கள் மூன்று போட்டியாளருக்கு   முதல் பரிசாக ரூபாய் 2000 , இரண்டாம் பரிசாக ரூபாய்1500 , மூன்றாம் பரிசாக ருபாய் 1000 வீதம் வழங்கப்படுகிறது. அந்தந்த பிரிவுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் .

மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெல்லும் மாணவர்களுக்கு 70 மதிபெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு ஏ  கிரேடு 5 புள்ளிகள், 60 சதவிகிததிற்கு மேல் பெற்றால் பி கிரேடு மற்றும் 5 புள்ளிகள் வழங்கபடும் . இதற்கு தேவைப்படும் ரூபாய் 4 கோடி நிதியை தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பெறலாம் . ஆண்டு தோறும் நவம்பர் மாதம் கடைசி வாரம் பள்ளிகளில் விழா நடத்த வேண்டும் மற்றும் கல்ல்வித்துறையின் ஆணைக்கினங்க செயல்பட வேண்டும் . போட்டிக்கு என மேல்முறையீட்டு மன்றம் மற்றும் மலர் தயாரிப்பு பரிசு பொருள்கள் என பல்வேறு குழுக்களை உருவாக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

சார்ந்த பதிவுகள்:

பள்ளிகல்வித்துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கல்வி செயலர் பிரதீப் யாதவ் 

தமிழக பள்ளிகளின் வளர்ச்சி மேம்பாட்டுக்கு உருதுணையாக இருந்த கல்வித்துறை செயலர் மாற்றமா 

English summary
here article tell about fine arts function celebration in schools

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia