சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணம் மாறுகிறது!

Posted By:

சென்னை: சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை சுயநிதி தொழில் படிப்பு கல்லூரி கட்டண நிர்ணயக் குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணம் மாறுகிறது!

சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்படுவதுபோல, சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு செய்யப்படுகிறது.

கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது பி.எட். படிப்புக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 47,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் எம்.எட். உள்ளிட்ட பிற படிப்புகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கட்டணம் நிர்ணயம் செய்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட காரணத்தாலும், பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுகின்ற காரணத்தாலும், மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பி.எட், எம்.எட், பி.பி.எட், எம்.பி.எட், டி.டி.எட். படிப்புகளை வழங்கிவரும் சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு 2015-16 கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது.

இதற்காக, சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளிடமிருந்து கல்விக் கட்டணப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைகளை வருகிற 31-ஆம் தேதிக்குள் உரிய படிவத்தில் கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தப் பரிந்துரைகளுக்கான மாதிரி படிவத்தை www.tndte.com என்ற இணையதளத்திலிருந்து கல்லூரிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Fee structure will be changed to Self-finanaced B.ed colleges in Tamilnadu. In this regard Fees structure committee has been constituted.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia