கால்நடை மருத்துவ படிப்பிற்கு முதல் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...!

கால்நடை மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை மாதம் 19ந் தேதி தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க மே 31ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் 5 நாட்கள் அவகாசம்.

சென்னை : 2017-2018ம் ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள இளநில பட்டப்படிப்புகளுக்கான 380 இடங்களுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்டையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த படிப்புகளுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான நடை முறை மே 15 முதல் தொடங்கியுள்ளது. மே 31ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது மேலும் 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் படி ஜூன் 5ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கால அவகாசம் நீட்டிப்பு

கால அவகாசம் நீட்டிப்பு

இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, தலைவர் சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை 51 என்ற முகவரிக்கு ஜூன் மாதம் 7ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 12ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது.

 தரவரிசைப் பட்டியல்

தரவரிசைப் பட்டியல்

ஜூன் மாதம் 30ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பபடும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை மாதம் 19, 20 மற்றும் 21ந் தேதி நடைபெறும். இந்த கல்வி ஆண்டில், சென்னை, நெல்லை ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் தலா 20 இடங்களும், ஒசூர் கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் 20 இடங்களும் என மொத்தம் 80 இடங்களுக்கு தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் இந்த கல்வியாண்டிலேயே கூடதல் இடங்களுக்கும் மாணவர் சேர்கை நடைபெறும்.

புதிய பாடத்திட்டம்
 

புதிய பாடத்திட்டம்

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கான காலம் கூடுதலாக 6 மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 6 மாத காலம் அதிகரிப்பு

6 மாத காலம் அதிகரிப்பு

இதுவரை 5 வருடம் இருந்த கால்நடை மருத்துவப் படிப்பு வருகிற கல்வியாண்டு முதல் 5 1/2 ஆண்டாக மாறுகிறது. இதனை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் திலகர் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
In 2017-2018, students will be admitted to the Plus 2 mark of 380 seats for undergraduates in the University of Veterinary Sciences.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X