தஞ்சாவூரில் பெண்களுக்கான பிரத்யேகமான மாபெரும் வேலைவாய்ப்பு கண்காட்சி!

Posted By:

தஞ்சாவூர்: எக்ஸ்போசர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தஞ்சையில் உள்ள பிரபல நிறுவனமாகும். இந்த நிறுவனம் கண்காட்சி மற்றும் மகளிருக்கான வேலை வாய்ப்பினை அறிமுகப்படுத்தும் வகையில் தஞ்சையில் மார்ச் 25 ம் தேதி மகளிர் மட்டும் 17 என்ற நிகழ்ச்சியினை நடத்தவிருக்கிறது.

மாதவம் செய்து மங்கையராய் பிறந்ததற்கும்!!!
பெண்ணை பிறந்ததன் பெருமைகளை உணர்த்திடவும்!!!

தஞ்சாவூரில் பெண்களுக்கான பிரத்யேகமான மாபெரும் வேலைவாய்ப்பு கண்காட்சி!

தொழில், வேலைவாய்ப்பு , மருத்துவம், குழந்தைகளின் வளர்ச்சி , மகளிர் மேம்பாடு, அழகு சாதனங்கள் , சமையல், அன்றாட தேவைகள் அனைத்திற்கும் உங்களுக்காக...விரைவில்... தஞ்சையில் ..."மகளிர் மட்டும்'17"

எக்ஸ்போசர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கல்வி, பயிற்சி மற்றும் நீண்ட நாள் கற்றல் போன்ற சேவைகளை செய்து வருகிறது. மேலும் ஸ்மார்ட் கிளாஸஸ் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான கருவிகள், வெப்சைட் வடிவமைப்பு, விஷ்வல் விளம்பரங்கள் மற்றும் பெரு நிறுவன தளிர்கள் மற்றும் விளம்பரங்கள் ஆகிய சேவைகளை இந்த நிறுவனம் செய்துவருகிறது. பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான கருவிகளை மிகவும் குறைந்த விலையில் வழங்கி வருகிறார்கள்.

குறிப்பாக பெண்களுக்கான வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் முயற்சியில் எக்ஸ்போசர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கண்காட்சிக்கு வரும் நுகர்வோரிடம் விற்பனை செய்வது மட்டும் குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல் நுகர்வோருக்கும் விற்பனையாளருக்குமிடையே ஒரு சுமூகமான நல் உறவு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் அவர்களின் முதல் குறிக்கோளாகும்.

நுகர்வோருக்கும் விற்பனையாளருக்குமிடையே ஏற்படும் நல் உறவு புதிய படைப்புகளை நுகர்வோருக்கு அறிமுகப்படுத்துவதில் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் புதிய படைப்புளை வாங்குவதற்கு சாத்தியமான நுகர்வோரிடம் அதனைப் பற்றிய தகவல்கள் மற்றும் மாதிரிகளைப் பற்றி விளக்கமாக கூறுவதும் இவர்களின் யுக்தியாகும் .

பெண்கள் கணவர், குழந்தைகள் மற்றும் அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டு தன்னையும் பார்த்துக் கொள்கிறார்கள். மார்ச் 25ம் தேதி நடைபெறும் கண்காட்சி பெண்களுக்காக நடத்தப்படும் ஒரு நாள் கண்காட்சியாகும் அதில் சுகாதாரம், பேஸிக் வெல் பியிங், அழகு மற்றும் ஃபேஷன் போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் கண்காட்சியில் இடம் பெறும். மேலும் கண்காட்சிக்கு பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தக் கண்காட்சியில் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களும் அளிக்கப்படும் மேலும் பெண்கள் சம்பந்தப் பட்ட அனைத்து துறை சார்ந்த விவரங்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும் . இது முழுக்க முழுக்க பெண்களுக்காக நடத்தப்படும் கண்காட்சியாகும். இதில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவியர்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம். பெண்களுக்கு சிறப்பு பரிசு பகுதியும் உள்ளது. நண்பர்களோடும், குடும்பத்தோடும் சென்று பயன் பெறுங்கள் மகிழ்ச்சி அடையுங்கள். மேலும் சிகிச்சை, ஷாப்பிங், குக்கிங் டெமான்ஸ்ட்ரேஷன் மற்றும் ஃபேஷன் சோஸ் ஆகியவைகள் கண்காட்சியில் இடம் பெறும். மற்றும் ஃபிரி சேம்பிள்களும் அளிக்கப்படும்.

பெண்கள் இந்தக் கண்காட்சிக்கு வருவதன் மூலம் புது ஸ்டைல்ஸ், புதிய தயாரிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இதனால் உங்கள் மனதும் உடலும் புத்துணர்ச்சி அடையும். கண்காட்சி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமையும். இதற்கு நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது.

மேலும் கண்காட்சியில் கலந்து கொள்பவர்களுக்கு எக்சாம் மெட்டீரியல்ஸ், மெகந்தி பெயிண்டிங்ஸ், பியூட்டி ப்ராடக்ட்ஸ் ஆகியவைகள் இலவசமாக வழங்கப்படும்.

English summary
Exposure India private limited tanjavur has announced exhibition and career opportunities for woman will be held on 25-03-2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia