தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட மாணவர்களின் பெற்றோரிடம் நான்கு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், ஏழை மாணவர்களுக்கு அரசு உத்தரவுபடி 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை எனவும் பல இடங்களில் புகார் வந்த வண்ணம் உள்ளது.

இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கடலூரில் பள்ளிகளின் நடைமுறை குறித்து ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரண்டு மாதங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் 16-06-2018 காலை 10 மணி முதல் 12 மணி வரை மாவட்ட ஆட்சியர் (புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) வளாகத்தில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
1. RTE 25% சேர்க்கை குறித்து ஏதேனும் புகார் இருப்பின்.
2. மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுத்தல் குறித்து.
3. பள்ளிகளில் சேர்க்கைக்கான இடம் இருந்தும் சேர்க்கை அளிக்க மறுப்பது.
5. சேர்க்கைக்காக கூடுதல் கட்டணம் வசூலிப்பது.
6. கட்டாய நன்கொடை வாங்குவது.
7. செலுத்திய பணத்திற்கு உரிய ரசீதுகள் அளிக்க மறுப்பது.
மேற்காணும் பொருள் சார்ந்து குறைகள் ஏதும் இருப்பின் மேற்கண்ட நாட்களில் நடைபெறும் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் புகார்களை மனுக்களாக அளிக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












