இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடம்: சென்னை நடந்தது முதல் நிலைத் தேர்வு

Posted By:

சென்னை: தொழிற் பயிற்சி நிலையங்களில்(ஐடிஐ) இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கான முதல் நிலைத் தேர்வு, சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்தத் தேர்வு நடந்த மையங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அரசு வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 329 இளநிலை பயிற்சி அலுவலர்கள் பணி காலியிடங்கள் இருந்தன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்தது.

இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடம்: சென்னை நடந்தது முதல் நிலைத் தேர்வு

இதைத் தொடர்ந்து இந்தப் பதவிகளில் ஆட்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப் முடிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்பணிக்கான முதல் நிலைத் தேர்வுக்கு 782 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதன் பின்னர் தேர்வு பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏற்பாடுகள் முடிந்து நேற்று தேர்வு நடைபெற்றது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே. பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்ற இந்தத் தேர்வை, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

English summary
Tamil nadu Government has conducted first level exam for Junior training officer posts in Government ITI. Tatally 782 students has wrote the exams in Chennai yesterday.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia