அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி தேர்வுகள் மே 19ல் தொடக்கம்

Posted By: Jayanthi

சென்னை: அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலை தூரக்கல்வி பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளன. தேர்வுக்கான விண்ணப்பங்களை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று அண்ணாமலை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலை தூரக் கல்வி நிறுவனம் சார்பில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளுக்கான தேர்வுகள் மே மாதம் நடக்க உள்ளதாக அப்பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், தேர்வுக்கான விண்ணப்பங்கள், தேர்வு அட்டவணை ஆகியவற்றை இணைய தளத்தில்இருந்த பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி தேர்வுகள் மே 19ல் தொடக்கம்

தேர்வு எழுத விரும்புவோர் இம்மாதம் 13ம் தேதிக்குள் அபராதம் ஏதும் இன்றி தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம். அபராதத்துடன் கூடிய தேர்வுக் கட்டணம் 20ம் தேதி வரை செலுத்தலாம். அதற்கு பிறகு தேர்வுக் கட்டணம் செலுத்த விரும்புவோர் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.750 செலுத்த வேண்டும். இவர்களுக்கு அண்ணாமலை நகரில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.

தேர்வுகள் மே மாதம் 19ம் தேதி தொடங்க உள்ளது. இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் 04144 - 238027, 237368 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

English summary
Examinations for Annamalai University distance education student has announced. For details pl contact: 04144 - 238027, 237368.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia