பிளஸ்-2 தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது...!!

Posted By:

டெல்லி: பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ஆம் தேதி நிறைவு பெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.72 லட்சம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர்.

பிளஸ்-2 தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது...!!

இந்த நிலையில் விடைத்தாள்களை திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 64 மையங்கள் அமைக்கப்பட்டன. மார்ச் 14-ஆம் தேதி தொடங்கிய விடைத்தாள்களை திருத்தும் பணி, பெரும்பாலான மையங்களில் கடந்த வாரம் முடிவடைந்தன. சென்னை, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் 3 நாள்களுக்கு முன்னர் நிறைவடைந்தன.

கடந்த சனிக்கிழமையுடன் விடைத்தாள் திருத்தும் பணி முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்களை பார்கோடு மூலமாக கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அரசு தகவல் தொகுப்பு மையத்தில் மதிப்பெண்களை தொகுக்கும் பணியும், சரிபார்க்கும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்தகவலைகளை பள்ளி கல்வித் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

English summary
A school education department official said, "Evaluation of Plus-Two answer sheets will be completed within two weeks. Last year, the Plus-Two results and class 10 results were announced on 7 May and 21 May. Since Assembly elections are to be held on 16 May, the department officials are planning to complete the evaluation before 7 May."

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia