இந்தியாவின் பள்ளி கல்விக்காக 25 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படும்.... ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

Posted By:

புது தில்லி : சர் சிக்ஷா அபியான் மற்றும் ராஷ்ட்ரீய மத்தியமிக் சிக்ஷா அபியான். போன்ற திட்டங்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் இந்தியாவின் கல்வித் துறைக்கு 25 மில்லியன் யூரோக்கள் வழங்க முன்வந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் ஜூன் 13ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் கல்வித் திட்டங்களுக்கு ஆதரவாக இதுவரை 80 மில்லியன் யூரோக்களை வழங்கி உள்ளது.

இந்தியாவின் பள்ளி கல்விக்காக 25 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படும்.... ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

இந்தியாவில் பள்ளி கல்விக்காக 25 மில்லியன் யூரோக்களை ஐரோப்பா வழங்க முன்வந்துள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத் துறையின் ஆதரவைக் காட்டுகிறது. ஐரோப்பா இதுவரை 520 மில்லியனுக்கும் அதிகமாக (தற்போது 3,700 கோடி ரூபாய் மதிப்பிற்கும்) நன்கொடை அளித்துள்ளது.

மேலும் நிகழ்ச்சியின் போது இந்தியாவின் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டோமாஸ் கோஸ்லோவ்ஸ்கி ஐரோப்பிய ஒன்றியம் இந்திய அரசாங்கங்களின் முதல் வளர்ச்சிப் பங்காளியாக இருந்தது என்பதை நினைவு கூர்ந்தார். 1994 ல் தொடக்க கல்வி திட்டம் மற்றும் அதன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 155 மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய பங்காற்றியதையும் நினைவு கூர்ந்தார்.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் ஆரம்பக் காலத்தில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது, 2002-ல் VIII வகுப்பு வரையிலான அடிப்படை கல்விக்கான சர்வ சிக்ஷா அபியான் திட்டம் கொண்டுவரப்பட்டது. 9 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைவருக்கும் கல்வி என்ற திட்டம்தான், சர்வ சிக்ஷா அபியான் ஆகும். (அனைவருக்கும் கல்வி) மற்றும் 2012 ல் கொண்டுவரப்பட்ட இரண்டாம் நிலை கல்விக்கான ஆர்.எம்.எஸ்.ஏ திட்டம் ஆகியவை அனைத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய பங்காற்றி உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டோமாஸ் கோஸ்லோவ்ஸ்கி தெரிவித்தார்.

English summary
The European Union today said it will release 25 million euros for Indias school education sector.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia