டெல்லி: இந்தியாவில் டோஃபல் உதவித்தொகைத் திட்டத்தை எஜுகேஷனல் டெஸ்ட்டிங் சர்வீஸ் (இடிஎஸ்) அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.
டோஃபல் தேர்வு என்பது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழி மதிப்பீட்டுத் தேர்வாகும். உலகம் முழுவதும் 130 நாடுகளில் இந்தத் தேர்வு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 கோடி பேர் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர்.

இந்தத் தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.toeflgoanywhere.org என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
இந்தத் தேர்வுக்கான உதவித்தொகை திட்டத்தை இடிஎஸ் அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. 105,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவித்தொகையாகும் இது.
இந்தத் தேர்வில் வெற்றி பெறும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் 7 ஆயிரம் அமெரிக்க டாலர்களை இடிஎஸ் வழங்கும். இது இந்திய மாணவர்களுக்கு மட்டுமே.
ஒவ்வொரு ஆண்டும் டோஃபல் உதவித்தொகையை இந்திய மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம் என்று டோஃபல் திட்டத்தின் செயல் இயக்குநர் ஜெனீபர் பிரௌன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

