தலித் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்த அம்பேத்கர்..!!

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும், தீண்டாமையை ஒழிக்கவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அம்பேத்கர். மிகவும் கொடிய வறுமையிலும் படித்து நாட்டின் முதல் சட்ட அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் என்றும் பிரபலமாக அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், நமது நாட்டின் மத்தியபிரதேச மாநிலம் மோவ் நகரில் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதியை நாம் அம்பேத்கர் ஜெயந்தியாகக் கொண்டாடி வருகிறோம்.

நாட்டின் மிகவும் திறமையான சட்ட நிபுணராகவும், பொருளாதார நிபுணராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல் தலைவராகவும் வலம் வந்தவர் அம்பேத்கர். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் இடம்பிடித்து சட்ட அமைச்சரானார்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டக்குழுவின் தலைவராகவும் மாறி சட்டத்தை இயற்றிய நிபுணராகவும் அறியப்படுகிறார்.

மாணவர்களை மனதில் கொண்டு அவர் திறம்பட கல்வி பயிலவும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர் அம்பேத்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலித் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்த அம்பேத்கர்..!!

வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், கல்வி பயில்வதில் அவருக்கு அதீத அக்கறை இருந்தது.
அம்பேத்கரின் தந்தை ராம்ஜி மாலோஜி சக்பால், தாயார் பீமாபாய் சக்பால். இவரது தந்தையார் ராணுவ அதிகாியாக இருந்தார். இவரின் பெற்றோருக்கு அம்பேத்கர் 14-வது குழந்தை.
இவர் பிறந்த இடம் அம்பாடாவே கிராமமாகும். அம்பேத்கர் தலித் குடும்பத்தில் பிறந்ததால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

பள்ளிப் படிப்பைப் முடித்த பின்னர், தனது அறிவைப் பெருக்கிக் கொண்டார். ஆசிரியர்களுடன் நன்கு பழகி அவர்களின் அன்பைப் பெற்றார்.
ஆசிரியர்கள், பரோடா மன்னரின் உதவியுடன், மும்பை பல்கலைக்கழகம் பி.ஏ, எம்.ஏ (BA , MA ) பயின்றார். பின்னர்

கொலம்பியா பல்கலைக்கழகத்துக்குச் சென்று எம்.ஏ, பிஎச்.டி.( MA , PhD ) பட்டத்தைப் பெற்றார். இதைத் தொடர்ந்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சேர்ந்து எம்எஸ்சி, டிஎஸ்சி ( MSc , DSc ) பட்டப்படிப்பை முடித்து மாமேதையாக இந்தியா திரும்பினார்.

இவர் வெளிநாடு சென்று பயில பரோடா மன்னர் உதவியாக இருந்தார்.
1923-ல், அவர் D.Sc படிப்பை முடித்து லண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்று திரும்பி அனைவரையும் வியக்க வைத்தார்.

பின்னர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டார். அப்போதுதான் மகாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்களுடன் நெருக்கமானார்.
சுதந்திரப் போராட்டத்துக்கு இடையேயும், சொந்த நாட்டிலேயே மக்கள் தீண்டாமையால் பாதிக்கப்படுவதை அறிந்து மிகவும் துயருற்றார். தீண்டாமையை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று சபதம் எடுத்து தனது வாழ்நாள் முழுவதும் அவர் பாடுபட்டார்.

கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் கூட இவருடன் உணவு உண்ணவதையோ, குடிநீர் அருந்துவதையோ விரும்பவில்லை. அந்த அளவுக்கு அப்போது தீண்டாமை நாட்டில் தாண்டவமாடியது. அதன் நிலை கண்டு அவர் கண்ணீர் வடித்தார்.

1927 -ம் ஆண்டில் தீண்டாமைக்கு எதிராக தீவிர இயக்கங்களைத் தொடங்க டாக்டர் அம்பேத்கர் முடிவு மேற்கொண்டார் . தலித் மக்கள் தண்ணீர் குடிப்பதர்காகவும், அவர்களுக்கு உரிய உரிமையைப் பெற்றுத் தருவதற்காகவும் அவர் பொது இயக்கங்கள் மற்றும் பொது குடிநீர் ஆதாரங்களை திறக்க பேரணிகள் நடத்தினார். இந்துக் கோவில்களில் தலித்துகள் நுழையும் உரிமைக்கான போராட்டத்தையும்

டங்கினார். தீண்டத்தகாத சமூகத்தினருக்கு நகரின் பிரதான தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான உரிமைக்காக போராடுவதற்காக மஹாட்என்ற இடத்தில் சத்தியாகிரகம் நடத்தினார் .
கில்டன் யங் ஆணையத்திடம் டாக்டர் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934-ம் ஆண்டு இந்தியாவில், இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.

தலித் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்த அம்பேத்கர்..!!

புத்த மதத்தைத் தழுவுதல்

இந்துவாகப் பிறந்த இவர் 1955-களில் புத்த மதம் நோக்கி தன் பார்வையைத் திருப்பினார். 1955-ம் ஆண்டில் பாரதீய பௌத்த மகாசபாவை அம்பேத்கர் தோற்றுவித்தார்.
1956-ம் ஆண்டு புத்தரும் அவரின் தம்மமும் (The Buddha and His Dhamma) என்ற புத்தகத்தை எழுதினார். இவரின் மறைவுக்கு பின் அப்புத்தகம் வெளியிடப்பட்டது. 1956-ல் இவர் புத்த மதத்தில் சேர்ந்தபோது இவருடன் 5 லட்சம் இந்துக்கள் புத்த மதத்தைத் தழுவினர்.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டின் முதல் சட்ட அமைச்சராக மாறி அரசியலமைப்புச் சட்டக் குழுவின் தலைவராக உயர்ந்தார். சட்டத்தை இயற்றி மாபெரும் சட்டமேதை என்ற பெயரைப் பெற்றார்.
1956-ல் அவர் மறைந்தார். 1948-ம் ஆண்டு முதலே அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது .நீரிழிவு நோய்க்காக எடுத்துக்கொண்ட மருந்தின் பக்கவிளைவுகள் மற்றும் பார்வைக் குறைபாடு காரணமாக 1954-ம் ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரை படுத்தபடுக்கையாகவே இருந்தார். 1955-ம் ஆண்டில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. கடைசியாக அவர் புத்தரும் அவரின் தம்மபதமும் என்ற புத்தகத்தை எழுதினார். புத்தகத்தை எழுதி முடித்த 3 நாட்களுக்குப் பின்னர் 1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அவர் மறைந்தார்.

இவரது முதல் மனைவி ரமாபாய் அம்பேத்கரை, 1906-ல் திருமணம் செய்தார். 1935-ல் அவர் இறந்தார். அதன் பிறகு 2-வதாக சவிதா என்பவரை அம்பேத்கர் 1948-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவருக்கு யஷ்வந்த் அம்பேத்கர் என்ற மகன் இருந்தார். 1912-ல் பிறந்த அவர் 1977-ம் ஆண்டு மறைந்தார்.

அவரது மறைவுக்குப் பின்னர் 1990-ம் ஆண்டு அம்பேத்கருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bhimrao Ramji Ambedkar (B R Ambedkar) was an Indian jurist, economist, social reformer and political leader who headed the committee drafting the Constitution of India from the Constituent Assembly debates, served as Law and Justice minister in the first cabinet of Jawaharlal Nehru, and inspired the Dalit Buddhist movement after renouncing Hinduism.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+