சென்னை: பரீதாபாத் இஎஸ் மருத்துவமனையில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ஜனவரி 20, 21-ம் தேதி வாக்-இன்-இன்டர்வியூவாக நடைபெறவுள்ளது.

இஎஸ்ஐ கழகமானது மத்திய தொழிலாளர் நலத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கழகமாகும். நாடு முழுவதும் தொழிலாளர் நலனைக் காக்கும்பொருட்டு மருத்துவமனை, கல்லூரிகளை நடத்தி வருகிறது.
மொத்தம் 37 பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. 8 பேராசிரியர் பணியிடங்களும், 10 இணை பேராசிரியர் பணியிடங்களும், 19 உதவி பேராசிரியர் பணியிடங்களும் காலியாகவுள்ளன.
தேர்வு Dean office, ESIC Medical College, National Housing (NH)-3, NIT, Faridabad என்ற முகவரியில் ஜனவரி 21 வரை நடைபெறவுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு http://www.esic.nic.in/rec_haryana.php என்ற இணையதள முகவரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications

