இஎஸ்ஐ கழகத்தில் நூலகர் வேலை இருக்கு...!!

Posted By:

சென்னை: கேரள மாநிலத்திலுள்ள இஎஸ்ஐ கழகத்தில் நூலகர் வேலை காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், திறமையும் உள்ள நபர்கள் ஜனவரி 6-ம் தேதிக்குள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இஎஸ்ஐ கழகத்தில் நூலகர் வேலை இருக்கு...!!

இந்தியத் தொழிலாளர்களுக்காக மத்திய தொழிலாளர் நலத்துறையால் இஎஸ்ஐ மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. 1948-ல் இது அமைக்கப்பட்டது.

இந்தப் பணியிடங்களுக்கு லைப்ரரி சயின்ஸில் டிப்ளமோ படிப்பு படித்திருக்கவேண்டும். முன்னதாக மெட்ரிக் பள்ளியில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தபாலில் அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்தவேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு மட்டுமே கட்டணம் உண்டு. எஸ்சி, எஸ்டி, இஎஸ்ஐ ஊழியர்கள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

நுழைவுத் தேர்வு, ஹால் டிக்கெட் உள்ளிட்ட விவரங்கள் இஎஸ்ஐ-யின் இணையதளமான http://esickerala.gov.in -ல் வெளியிடப்படும்.

English summary
Employee's State Insurance Corporation (ESIC), Kerala invited applications for 04 Librarian Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 06 January 2016. ESIC, Vacancy Details Total Number of Posts: 04 Name of the Post: Librarian Eligibility Criteria for Librarian Posts Educational Qualification: Matriculation or equivalent pass & Diploma in Library Science ( 2years course after matriculation) Age Limit: 19-25 years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia