இஎஸ்ஐ-யில் வேலை பார்க்க ஆசையா? இப்பவே விண்ணப்பிங்க!

Posted By:

சென்னை: தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தில் (இஎஸ்ஐ) பல்வேறு பணியிடங்களுக்காக வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படுவது இஎஸ்ஐ மருத்துவமனைகள். ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவான ஊதியம் வாங்கும் தொழிலாளர்களின் மருத்துவ சேவைகளுக்காக அமைக்கப்பட்டவை இந்த மருத்துவமனைகள்.

இஎஸ்ஐ-யில் வேலை பார்க்க ஆசையா? இப்பவே விண்ணப்பிங்க!

இந்த இஎஸ்ஐ நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர், கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

ஸ்டெனோகிராபர், அப்பர் டிவிஷன் கிளார்க், மல்ட்டி டாஸ்க்கிங் ஸ்டாப் என பல பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஸ்டெனோகிராபர் பதவிக்கு பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்கவேணஅடும்.

அப்பர் டிவிஷன் கிளார்க் பதவிக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்படிப்பை முடித்திருக்கவேண்டும். மல்ட்டி டாஸ்க்கிங் ஸ்டாஃப் பணியிடத்துக்கு மெட்ரிக்குலேஷன் படிப்பு அல்லது ஈடான படிப்பை முடித்திருக்கவேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு வழியாக இந்த பணியிடங்களுக்கு ஆட்களை இஎஸ்ஐ நிறுவனம் தேர்வு செய்யும்.

தகுந்த ஆவணங்களுடன் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை இஎஸ்ஐ நிறுவனத்துக்கு அனுப்பவேண்டும்.

English summary
Employees' State Insurance Corporation invited applications for the posts of Stenographer, Upper Division Clerk and Multi Tasking Staff. The eligible candidates can apply to the post through the prescribed format along with other necessary documents on or before 31 October 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia