சென்னை இஎஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்ற வாய்ப்பு!!

Posted By:

சென்னை: சென்னையிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் நர்ஸ் உள்ளிட்ட 92 பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்திலுள்ள பல்வேறு இஎஸ்ஐ மருத்துவமனைகளில் இந்தப் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை இஎஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்ற வாய்ப்பு!!

நர்ஸ், பார்மசிஸ்ட், ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர், ஆய்வக உதவியாளர், ஜூனியர் ரேடியோகிராபர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிட்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படும். விண்ணப்பத்தை எஸ்பிஐ வங்கியில் சலான் நிரப்பி செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், இஎஸ்ஐ ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு இந்த கட்டணம் கிடையாது.

மேலும் விவரங்களுக்கு http://www.esic.nic.in/index.php என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia