இன்று சுற்றுச்சூழல் தினம்

Posted By:


சுற்றுசுழல் என்பது உயிறுள்ள உயிரற்ற காரணிகளை கொண்ட அமைப்பே சுற்றுசூழல்   ஆகும்  . சுற்றுசூழல் என்பது உயிருள்ள காரணிகளான மனிதன் , மரம், செடி, கொடி, விலங்குகள் , பறவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்த அமைப்பு சுற்றுசூழல் ஆகும் . இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள வளர்ந்து வரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் அனைத்தும் சுற்றுசூழலை மாசு படுத்தாமல் காக்க வேண்டிய பொருப்புடையவர்கள் ஆவார்கள் .

சுற்றுசூழல் காரணிகளான உயிருள்ள மரம், செடி, கொடி, விலங்குகள் இவை எப்போதும் காக்க வேண்டியவைகளாகும் . உயிரற்ற நிலக்கரி, பெட்ரோல் ,சூரிய ஆற்றல் மீண்டும் புதுபிக்க முடியாதவை . ஆனால் பெட்ரோல் ,நிலக்கரி போன்ற காரணிகள் அதிகரித்து பயன்படுத்துவதால் கார்பன் சுற்றுச்சூழலில் மாசு அதிகரித்து காணப்படுகிறது. மேலும் நாம் பயன்படுத்தும் ரெஃப்ரிஜ்ரேட்டரில் உள்ள குளோரோஃபார்ம் ஓசோன் படலத்தில் துளைகளை ஏற்படுத்துகிறது .
கார்பன் பயன்பாட்டை அதிகரிக்கும் அதே நேரத்தில் அதற்கு ஈடான மரம் வளர்ப்பு அவசியமாகும். எவ்வளவு மரம் வளர்க்கிரோமோ அவ்வளவு பாதுகாப்பு அனைவருக்கும் உறுதியாகும் .


சுற்றுசுழல் என்பது உயிறுள்ள உயிரற்ற காரணிகளை கொண்ட அமைப்பே சுற்றுச்சூழல் ஆகும்


சூரிய ஆற்றலான சோலார்களை பயன்படுத்த வேண்டும். மேலும் மின்சாதங்களின் பயன்பாட்டை குறைத்து அனைவரும் இயற்கை சூழலில் சிறிது நேரமாவது இருத்தல் அவசியமாகும் .
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெய்யில் வெப்ப கொடுமைக்கு காரணம் வார்தா புயலால அழிந்தபோன மரங்கள் ஆகும் . தற்பொழுது அரசும் மரங்களை காக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மாணவர்களை உற்சாகப்படுத்தி மரம் வளர்க்க முயன்று வருகிறது. மக்களும் மரம் வளர்க்க முனைய வேண்டும் .
காடுகளின் அழிவு சுற்றுசுழல் மாசுக்கு ஒரு பெரிய காரணமாகும் அவற்றை தடுக்க வேண்டும் . புலி, சிங்கம் , சிறுத்தைகள் போன்ற உயிரினங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் . 1972 ல் புலிகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது .இன்றுவரை 27 புகலிடங்களை தேர்ந்தெடுத்து அரசு காத்துவருகின்றது . யானைகள் பாதுகாக்கவும் அரசு திட்டமிட்டு செயல்ப்படுத்துகின்றது .


இந்தியா வெப்ப மண்டல காடுகள் , மாங்குரோவ் காடுகள் ,ஊசியிலைகாடுகள் போன்றவை நிறைந்தவை . மத்திய பிரதேசம் ,ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் மிகுந்த காடுகள் கொண்டவைகளாகும் . இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகள், கிழக்கு தொடச்சி மலைகள் , இரண்டும் பல்வேறு இயற்கை வளங்களால் சூழப்பட்டுள்ளன . மகேந்திர கிரி மலையில் ராகெட் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் இஞ்சின் தயாரிக்கப்படுகிறதெனில் நம்முடைய இயற்கை வளங்களின் ஆற்றலையும் அதன் பாதுகாப்பு தன்மையையும்  அறியலாம். மலைகளை ஆக்கிரமித்து அமைக்கும் வாழிடங்களை தடுத்து நிறுத்த வேண்டும் ஆதலால் யானைகள் ,புலிகள் தங்களது வாழிடங்களை விட்டு வெளியேறாமல் இருக்கும். வாகனங்களின் பயன்பாட்டை குறைத்துகொள்ளலாம் இல்லையெனில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம் .


குறைந்து வரும் உயிரினங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அவற்றை காக்கும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மேலும் அரசுக்கு உதவ பொதுமக்களும் மாணவ அமைப்புகளாக, நிறுவனங்களாக, தன்னார்வ தொண்டு நிறுவனங்களாக என குழுக்கள் முன்வர வேண்டும் .

 

சுற்றுசுழல் என்பது உயிறுள்ள உயிரற்ற காரணிகளை கொண்ட அமைப்பே சுற்றுச்சூழல் ஆகும்


பாலித்தீன் பைகளின் பயன்பாட்டை குறைத்துகொள்ள வேண்டும் . சுற்றுச்சூழலினை காக்க அரசு சில சலுகை திட்டங்களை கொண்டு வரலாம் . எந்தவொரு குடும்பம், அல்லது வணிக நிறுவனங்கள் ,மாணவ குழுக்கள் , தொழில் நிறுவனங்கள் சுற்றுசுழலினை காக்க முனைந்து விரைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு சலுகைகள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அரசு உந்துலாக இருக்க திட்டங்களை வகுத்து அவற்றை மக்களின் முன் அறிவிக்கலாம் . இதன் பொருட்டு மாற்றம் நிச்சயம் விளையும் . இவற்றை கண்காணிக்க மாணவ குழுக்களை அரசு நியமிக்கலாம் . மாணவர்களையே அந்தந்த பகுதியின் சுற்றுசூழல் மேம்பாட்டாளராக நியமிக்கலாம் .இதன் மூலம் வருங்காலமும் சுற்றுசூழல் பாதுகாப்பை கற்ற சந்ததியினராக இருக்க வாய்ப்பளிக்கலாம் .

English summary
above article mentioned about environmental and features of environmental

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia