ஐஐடி, ஐஐஎம் மாணவர்களை நோக்கி படையெடுக்கும் தொழில் நிறுவனங்கள்!!

Posted By:

சென்னை: ஐஐடி, ஐஐஎம் முடித்த மாணவர்களை தொழில்நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் சேர்க்க போட்டி போட்டு வருகின்றனர். நாட்டில் ஐஐடி, ஐஐஎம்-களில் படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

உள்நாட்டு நிறுவனங்கள் ஐஐடி, ஐஐஎம் மாணவர்களுக்கு நல்ல சம்பளம் உள்ளிட்ட வசதிகளைக் கொடுத்து சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர். இவர்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களது நிறுவனம் மேலும் வளர்ச்சி அடையும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

ஐஐடி, ஐஐஎம் மாணவர்களை நோக்கி படையெடுக்கும் தொழில் நிறுவனங்கள்!!

இதுகுறித்து ஐஐடி பம்பாயில் பட்டப்படிப்பு முடித்த மாணவர் ரிதேஷ் அரோரா கூறியதாவது: நான் பம்பாய் ஐஐடி-யில் படிப்பு முடித்தேன். தற்போது BrowserStack.com என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். ஐஐடி-களில் படிப்பதன் மூலம் அந்த மாணவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சம்பளத்தை அளிக்கின்றன. அந்த நிறுவனங்களுக்குத் தேவையான தகுந்த ஆலோசனைகளை நாங்கள் அளித்து வருகிறோம் என்றார் அவர். நாடு முழுவதுமே ஐஐடி, ஐஐஎம் மாணவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்கள் ஹிமான்ஷு அகர்வால் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: ஐஐடிகளில் படிப்பதன்மூலம் உலகம் முழுவதும் நாங்கள் அறியப்படுகிறோம். நல்ல சம்பளம், நல்ல நிறுவனம் போன்ற வசதிகள் தேடி வருகின்றனர் என்றார் அவர்.

English summary
Of late, one has seen a rise in the number of startups by IIT and IIM graduates. Some entrepreneurs think that studying at the elite institutes have given them an edge over others, as peer group interactions and pedagogy at these institutes accelerate their growthas entrepreneurs. “I do indeed feel that studying at IITs gives one an edge, especially when it comes to launching new ventures. The exposure to resources and people is formidable and irreplaceable in terms of value.Additionally, engineering at IIT isn’t limited to just the core technology subjects. We also learned critical problem-solving skills,” says Ritesh Arora, an IIT Bombay graduate and co-founder at BrowserStack.com, a cross browser testing tool.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia