ஜிப்மரில் எம்பிபிஎஸ் சேர ஆசையா...? மார்ச் 7 முதல் ஆன்-லைனில் விண்ணப்பம்!!

Posted By:

சென்னை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர உதவும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 6 முதல் வழங்கப்படவுள்ளன.

விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விநியோகிக்க உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், 200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டு தோறும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை சிறப்பாக நடந்து வருகிறது.

ஜிப்மரில் எம்பிபிஎஸ் சேர ஆசையா...? மார்ச் 7 முதல் ஆன்-லைனில் விண்ணப்பம்!!

இந்தாண்க்கான ஜிப்மர் நுழைவு தேர்வு ஜூன் 5-ம் தேதி, 75 நகரங்களில் காலை, 10:00 மணி முதல், 12:30 மணி வரை நடைபெறவுள்ளது.. இதற்கு ஆன்லைன் மூலம், விண்ணப்ப விநியோகம் மார்ச் 7-ம் தேதி துவங்குகிறது.

தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, நாகர்கோவில், திருச்சி, துாத்துக்குடி, நெய்வேலி, நாமக்கல் மற்றும் புதுச்சேரியில் நுழைவுத் தேர்வு நடக்கிறது. ஆன்லைன் மூலம், மே 4-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்.

பொது பிரிவு, ஓ.பி.சி., - ஓ.சி.ஐ., பிரிவினர் விண்ணப்ப படிவ கட்டணமாக, ரூ.1,000 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம், நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வாயிலாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

கூடுதல் விவரங்களுக்கு jipmer.edu.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Puducherry JIPMER hospital authorities has announced Entrance exams for MBBS in Jipmer. For more details Students can log on into jipmer.edu.in. The application for the course of MBBS will be issued in online from March 7.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia