எஞ்ஜீனியர்களுக்கு தேசிய உரத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!!

Posted By:

சென்னை: மத்திய அரசு நடத்தி வரும் தேசிய உரத் தொழிற்சாலையில் இளநிலை பொறியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

மத்திய அரசு ஹரியாணா மாநிலத்தில் தேசிய உரத்தொழிற்சாலையை நடத்தி வருகிறது. இந்த மிகப்பெரியத் தொழிற்சாலையில் ஜூனியர் பொறியாயளர் உதவியாளர் கிரேடு II பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எஞ்ஜீனியர்களுக்கு தேசிய உரத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!!

ஜூனியர் எஞ்சினீயரிங் அசிஸ்டெண்ட் கிரேட் 2 பிரிவில் 19 இடங்கள் காலியாகவுள்ளன. புரொடக்ஷன் பிரிவில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயற்பியல், வேதியியல், கணிதப் பாடத்தில் 3 வருட பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது கெமிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மெக்கானிக்கல் பிரிவில் 7 காலியிடங்கள் உள்ளன.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மெக்கானிக்கல் துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

எலக்ட்ரிக்கல் பிரிவில் 4 காலியிடங்கள் உள்ளன. இந்த எலக்ட்ரிக்கல் பிரிவில் விண்ணப்பிக்க 3 வருட டிப்ளமோவை முடித்திருக்க வேண்டும்.

இன்ஸ்ட்ருமென்டேஷன் பிரிவில் 9 காலியடங்கள் இருக்கின்றன. இந்த வேலையில் சேர இன்ஸ்ட்ருமென்டேஷன் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் ரூ.9 ஆயிரம் முதல் 15,400, இதர சலுகைகள் என்ற அடிப்படையில் இருக்கும்.

வயதுவரம்பு 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு பதின்டா நகரில் நடைபெறும். www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆகஸ்ட் 20 விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.

மேலும் விவரங்களுக்கு www.nationalfertilizers.com என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

English summary
Application has been invited from Engineers for recruitment in National Fertilizers Company. The company situated in Haryana. For more details aspirants can logon into www.nationalfertilizers.com

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia