பொறியியல் கலந்தாய்விற்கான “ரேங்க் லிஸ்ட்” வெளியீடு – 23 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆப்!

Posted By:

சென்னை: தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கான மாணவர்கள் தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பி.இ படிப்புகளுக்கு 1,53,238 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1,50,910 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பொறியியல் கலந்தாய்விற்கான “ரேங்க் லிஸ்ட்” வெளியீடு – 23 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆப்!

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்களின் கட்-ஆப் வாரியான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதனை அண்ணா பல்கலைக் கழகத்தின் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா வெளியிட்டார்.

பொறியியல் கலந்தாய்விற்கான “ரேங்க் லிஸ்ட்” வெளியீடு – 23 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆப்!

இத்தரவரிசைப் பட்டியலில், 23 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆப் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் கோவை சூலூரைச் சேர்ந்த கீர்த்தி பாலன் என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். தருமபுரி நிஷாந்த் ராஜன் 2ம் இடமும், திருச்சி முகேஷ் கண்ணன் 3ம் இடமும் பெற்றுள்ளனர்.

பொறியியல் கலந்தாய்விற்கான “ரேங்க் லிஸ்ட்” வெளியீடு – 23 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆப்!

ஏனைய இடங்களான 4,5,6,7ம் இடங்களை முறையே நாமக்கல் நிவாஷ், சென்னை சரவணக்குமார், அவினாசி கிரிதரன், விழுப்புரம் பிரவீன் குமார் ஆகியோர் பெற்றுள்ளனர்.

பொறியியல் கலந்தாய்விற்கான “ரேங்க் லிஸ்ட்” வெளியீடு – 23 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆப்!

பொறியியல் படிப்பிற்கான பொதுக் கலந்தாய்வு வருகின்ற ஜூலை 1 முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Engineering admission rank list released by Anna University today. 23 students got 200 out of 200 in cut-off marks.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia