இன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது .கல்லுரிகளின் தரவரிசை விரைவில் வெளியிடப்படும்

Posted By:

இன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயருகின்றது. கல்வி செயலர் சுனில் பாலிவால் தெரிவித்தார் .சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் சுனில் தெரிவித்தாவது, நீட் தேர்வு முடிவால் மெடிக்கல் கவுன்சிலிங் முடிவுசெய்ய முடியவில்லை. அவ்வாறே இன்ஜினியரிங் கவுன்சிலிங் தாமதமாகின்றது. நீட் தேர்வு முடிவு ஜூன் 26 க்குள் வெளிவரும் என எதிர் பார்க்கபடுகின்றது .

 

இன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயருமா, செயலர் சுனில் அறிவிப்பு


1 லட்சத்து 41ஆயிரம் பேர் இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 71ஆயிரத்து 275 பேர் முதல் பட்டதாரிகள் ஆவர் , 50 ஆயிரத்துக்கு மேல் மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளனர் .
பாலசுப்பிரமணியன் அவர்கள் கமிட்டியிடம் கல்லுரிகளில் புதிய கட்டணம் நிர்ணயிக்க கல்லுரிகள் கேட்டுள்ளன . இதன்படி கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று தகவல்கள் கிடைக்கின்றன . ஆனால் கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணத்தை விட அதி கட்டணம் வசூலிக்ககூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைகழகத்தில் தன்னாட்சி பெறாத இன்ஜினியரிங்க கல்லுரிகள், பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லுரிகள் , அரசு கல்லுரிகளின் தேர்ச்சி சதவீதம் வெளியானது. அதனையடுத்து இன்ஜினியரிங் தன்னாட்சி பெற்ற கல்லுரிகள் அரசு கல்லுரிகள் அண்ணா பல்கலைகழகத்தின் வளாகத்தில் இயங்கும் நேரடி கல்லுரிகளின் மாணவ தரவரிசை வெளியிடப்படும்.

இஞ்சினியரிங் கவுன்சிலிங் தரவரிசை விரைவில் வெளிவரும் போது கல்லுரியின் தரம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் . கவுன்சிலிங் நேரத்தில் கல்லுரி தேர்வு செய்ய எளிதாகும் .

இன்ஜினியரிங் சேர்க்கை சரிவு 11 பொறியியல் கல்லுரி மூடல் அனைத்தும் இனிவரும் கல்லுரிகளின் அடிப்படை வசதி மற்றும் கல்வித்தரம் உயர ஏதுவாக இருக்கும் . 

English summary
here article mentioned about engineering fees structure

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia