பி.இ. மோகம் அவ்வளவுதானா.. மாணவர் சேர்க்கையில் 3 ஆண்டுகளில் 22 சதவீத சரிவு!

Posted By:

சென்னை ; என்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களின் சேர்க்கை கடந்த மூன்ற ஆண்டுகளில் 22 விழுக்காடு குறைந்துக் காணப்படுகிறது.

என்ஜினியரிங் படித்தவர்கள் என்றால் ஒரு காலக்கட்டத்தில் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. என்ஜினியரிங் படிப்புகளில் சேருவதில் மாணவர்களின் ஆர்வமும் அதிகமாக இருந்தது.

ஆனால் சமீபக்காலமாக அதில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமே இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

கட்டாயக் கல்வி

இன்றைய சமுதாய சூழலில் அனைவருக்கும் கல்விக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது நல்லதுதான். ஆனால் கல்வி மட்டும் கட்டாயம் ஆக்கப்பட்டால் போதாது அதற்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதிலும் முன்னேற்றம் காணப்பட வேண்டும். இன்றைக்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றவர்களும் கூட தங்கள் குழந்தைகளுக்கு கல்வியறிவினைக் கட்டாயம் அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வரும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

முந்தைய தலைமுறைக்கு

முந்தைய தலைமுறையினருக்கு கல்வி ஒரு அரியவாய்பாகவும் அந்த அரியவாய்ப்புக் கிடைக்கப் பெற்றவர்களுக்கு அது அருமையான வாய்பபாகவும் அமைந்தது. படித்தால் மட்டும் போதும் ஏதாவது ஒரு வேலைக்கு போய்விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று ரிகிடி முடித்தவர்கள் என்று சொன்னால் அந்த தகுதி மட்டும் வேலை வாய்ப்புக் கிடைப்பதற்கு போதுமானதாக இருப்பதில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பது பெரும் சவாலாகவே உள்ளது.

ஐ.டி நிறுவனங்கள்

1990ம் ஆண்டுகளில் ஐ.டி நிறுவனங்கள் வந்த போது அங்கு போதுமான ஐ.டி வல்லுநர்கள் இல்லை. ஆதலால் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் அத்துடன் ஐ.டி கோர்ஸ் படித்த சான்றிதழ் பெற்றவர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது. மெக்கானிக்கல், சிவில் படித்த மாணவர்களுக்கும் கேப்ஸ் இன்டர்வியூவிலேயே வேலைக் கிடைக்கும் காலம் இருந்தது. ஆனால் இன்றைக்கு சமீபத்திய ஆராய்ச்சியின் படி ஐ.டி படித்தவர்களில் 12 பேரில் ஒருத்தருக்குத்தான் வேலைக் கிடைக்கிறது. இதுபோலத் தான் எல்லாத்துறைகளில் படித்து முடித்து வருபவர்களில் ஒரு சிலருக்குத் தான் வேலைக் கிடைக்கிறது.

கூடுதல் தகுதி

1970-1980ம் வருடங்களில் டிப்ளமோ படித்தாலே போதும் வேலைக் கிடைத்து விடும் என்ற நிலை இருந்தது. அதற்குப் பின் எஞ்னியரிங் படித்தால் போதும் வேலைக் கிடைத்துவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்றையக் காலக்கட்டத்தில் எம்.இ அதையும் தாண்டி வெளிநாட்டில் எம்.எஸ் படிப்பு என்பத கூடுதல் மதிப்பை தருவதாக உள்ளது. 1970ம் ஆண்டுகளில் தொழிற்சாலைகளின் வரவால் வேலை வாய்ப்பு அதிகம் இருந்தது. 1990ம் ஆண்டுகளில் ஐ.டி வரவால் வேலை வாய்ப்பு அதிகம் இருந்தது. இன்றையக் காலக்கட்டத்தில் எத்தனையோ தொழில்வாய்ப்புகள் புதிது புதிதாக வந்துக் கொண்டே இருந்தாலும் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லை. வேலையில்லாப் பற்றாக்குறையே அதிகமாகக்காணப்படுகிறது.

சுயவேலை வாய்ப்பு

இந்த நிலைமையை எளிதாக மாற்றி விட முடியாது. ஆனால் சிறிது சிறிதாக மாற்ற இயலும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் படித்தால்தான் வேலைக் கிடைக்கு. நல்லாப் படி நல்ல வேலைக் கிடைக்கும் என கூறிவருகிறார்கள். இது நல்ல விஷயம் தான். ஆனால் மாணவ மாணவியரிடையே சுயல் தொழில் பற்றிய விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்துவது முக்கிய பணியாகும். படித்துவிட்டு ஒரு கம்பெனியில் வேலை செய்வதில் வாழ்க்கை அடங்கிவிடாது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விவசாயம் முதல் ரியல் எஸ்டேட் வரை எல்லாத் தொழில்களைப்பற்றிய அறிவோடு நம் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். படித்தால் மட்டும் தான் வேலைப் பார்க்க முடியும் என்ற குறுகிய வட்டத்தில் இருந்து வெளிய வரச் செய்ய வேண்டும். என்ற குஜராத் போன்ற சுயதொழில் சார்ந்த சமூகமாக நாமும் மாறும் போது வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க முடியும்.

English summary
In past 3 years, there was a 22% drop in engineering enrolments. Unemplyment is the main reason for the fall, it is noted.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia