பொறியியலாளர் தினமாக நினைவுகூறப்படும் விஸ்வேஸ்வரய்யா பிறந்ததினம் !!

Posted By:

விஸ்வேஷ்வரய்யா என்ற பொறியியல் வல்லுநரை கௌரவப்படுத்த 156 வது பிறந்ததினத்தை நாம் கொண்டாடும் நாள் ஆகும் . இந்தியாவின் மிகசிறந்த பொறியியல் வல்லுநரான விஸ்வேஸ்ரய்யா அவர்கள் பிறந்த தினத்தை பொறியியல் தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது . 2017 ஆம் ஆண்டில் 49 வது வருட பொறியியல் தினநாளை இந்தியா கொண்டாடுகிறது .

இந்திய பொறியியல் தின சிறப்பு

விஸ்வேஷ்ரய்யா செப்டம்பர் 15 ஆம் நாள் 1861 ஆம் ஆண்டு கோலார் மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் பிறந்தார் . மத்திய கல்லுரி பெங்களூரில் 1881 முதல் 1883 வரை பொறியியலில் சிவில் படிப்பை முடித்த விஸ்வேஸ்வரய்யா மிகச்சிறந்த கட்டுமான வரலாற்றை நாட்டில் உருவாக்கியுள்ளார் .

பொதுதுறை சிவில் கட்டிடத்துறையில் பணியாற்ற தொடங்கிய விஸ்வேஸ்ரய்யா 1884 மும்பையில் பணியாற்ற தொடங்கினார் . பொதுத்துறை பொறியியல் வல்லுநராக இவர் பணியாற்ற தொடங்கிய காலத்தில் மாணவர்கள் அதிக படியான சிறப்பான சாலைகள், கட்டிடங்கள் , நகரமைப்புகள் அமைத்துள்ளார் .

விஸ்வேஸ்வரய்யா அவர்கள் மைசூரில் பணியாற்ற தொடங்கினார் அத்துடன் 1909 ல் மைசூரில் சிறந்த பொறியியல் வல்லுநராக பதவிஉயர்வு பெற்று பணியாற்றினார் . இவருடைய காலத்தில் தானாகவே செயல்படும் வெள்ள வாயில்கள் அமைத்தல் சிறப்பு வாய்ந்திருந்தது அவற்றை சிறப்பாக செய்துமுடித்தார். புனேயில் இவர் உருவாக்கியிருந்த நீர்தேக்கம் மிகசிறந்தது ஆகும் . இவர் உருவாக்கிய வெள்ள வாயிலை மாதிரியாக கொண்டு புனே மற்றும் சென்னையில் உருவாக்கப்பட்டது .

கிருஷ்ணராஜா சாகர் அணையை கட்டுவதில் சிறப்பு தலைமை பொருப்பில் இவர் இருந்தார் . இவர் திவானாக செயல்ப்பட்டார் . இவருடைய கட்டிடம் மற்றும் நகர் உருவாக்குதலில் காட்டிய பங்களிப்பை அங்கிகரித்து அரசு அவருக்கு இந்தியாவில் மிகச்சிறந்த விருதான பாரத ரத்னா விருதை 1955இல் வழங்கியது. மாபெரும் மனிதருக்கு மரியாதை செலுத்தி அவரை பெருமிதப்படுவதில் இந்தியா பெருமை அடைகிறது .

இந்திய பொறியியல் மாணவர்களுக்கு அவருடைய ஆக்கம் மிகச்சிறந்தது படிப்பினை ஆகும்.  இந்த வரலாற்று மிக்க நாளை சிறப்பிக்கவே பொறியியல் தினமாக இந்தியா கொண்டாடுகிறது.  அற்புத ஆக்கதிறனை கொண்ட அவரை நினைவுப் படுத்தி இன்னும் பல சாதனைகள் புரிய இந்திய பொறியியல் மாணவர்கள் சிறப்பு செய்வார்கள் .

சார்ந்த பதிவுகள்: 

அறிவை புகட்டி அன்பில் கலந்து பண்பாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்!! 

ஆசிரியர்கள் தின கொண்டாட்டத்துடன் ஆசிரியர்களின் சிறப்புகள் 

 தேசிய விளையாட்டு தின சிறப்புக்கள் !!

English summary
here article tell about engineering day special

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia