பொறியியல் படிப்பைத் தேர்வு செய்யலாமா வேண்டாமா?

Posted By:

சென்னை : பொறியில் கல்லூரிகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக பொறியியல் படிப்பினைத் தேர்வு செய்து படிக்கலாம். முழுக் கவனத்துடன் படித்த்ல் வெற்றி நிச்சயம்.

பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில் என்ஜீனியரிங், பயோ டெக்னாலஜி, ஆட்டோ மொபைல், டிரிபிள் இ, டெக்ஸ்டைல், லெதர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஏரனாடிக்கல் என்ஜீனியரிங், பயோ மெடிக்கல் போன்ற பல்வேறு துறைகள் உள்ளன. மாணவர்கள் அதில் விருப்பமுள்ள துறைகளை எடுத்து படிக்கும் போது கட்டாயம் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு வரமுடியும்.

என்ஜீனியரிங் படித்துவிட்டு எத்தனையோ பேர் வேலையில்லாமல் இருக்கலாம். ஆனால் என்ஜீனியரிங் படிப்பில் மட்டும் அல்ல எல்லாத் துறையிலேயும் படித்து விட்டு வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் உள்ளது.

அதிக உழைப்பு அதிக வாய்ப்பு

கலை அறிவியல் படித்தவர்களில் பெரும்பாலானோர் தங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை செய்வதில்லை. ஆனால் என்ஜீனியரிங் படித்துவிட்டு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்றால் அது பெரிதாகப் பேசப்படுகிறது. ஏனென்றால் பொறியியல் படிப்பிற்கு கலை அறிவியல் படிப்பைவிட அதிகமாக பணம் மற்றும் நேரம் செலவழிக்கப்படுவதால்தான் அது பெரிதாகப் பேசப்படுகிறது. போட்டி அதிகமாக உள்ளதால் அதிகமாக கஷ்டப்படுகிறவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகின்றன.

பள்ளியின் பங்கு

பொறியியல் படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கின்றவர்கள் எத்தனையோபேர்கள் உள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் தங்களுக்கு எந்த கோர்ஸில் சேர விருப்பமோ அந்த கோர்ஸ் எடுத்து ஆர்வமாகப் படிக்கும் போது கட்டாயம் வேலைவாய்ப்பு என்பது நிச்சயம் இருக்கும். அதுமட்டுமல்லாமல் நிறைய பள்ளிகளில் 11ம் வகுப்பு பாடங்களை எடுக்காமலேயே 12ம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் பொறியியலில் முதலாம் ஆண்டில் 11ம் வகுப்பு பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்தே பாடங்கள் வருகிறது. மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு பாடத்தைப் படித்துவிடுவதால் பொறியியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரிலேயே தோல்வியை சந்திக்கும் நிலைமை உண்டாகிவிடுகிறது. அதனால பள்ளிகளும் மாணவர்களுக்கு அந்தந்த வகுப்பில் உள்ள பாடங்களை ஒழுங்காக நடத்தும் போது மாணவர்கள் பிற்காலத்தில் கஷ்டப்படமாட்டார்கள்.

சிறப்பு வகுப்புகள்

மேலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கென ஸ்கில் டெவலப்மென்ட் வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும். மேலும் கம்யூனிகேசன் ஸ்கில், பிரசன்டேசன் ஸ்கில், லீடர்சிப் ஸ்கில் போன்றவற்றில் மாணவர்கள் தனித்திறமையுடன் விளங்குவதற்கு ஏற்றாற்போல் கல்லூரிகள் செயல்பட வேண்டும். மேலும் பல லட்சங்களை செலவழித்துப் படிக்கும் மாணவர்களும் படிப்பில் முழுக் கவனத்டனம் ஆர்வத்துடனும் படிக்கும் போது கட்டாயம் படித்து முடித்து வெளியே நல்ல வேலையுடன் வரலாம்.

கல்லூரியின் தரம்

மாணவர்கள் நல்ல உள்கட்டமைப்பு, நல்ல கல்வித்தரம், வாய்ந்த ஆசியர்கள் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் போது கட்டாயம் வேலை வாய்ப்பு நிச்சயம். மேலும் அவர்கள் கல்லூரியில் சேரும் முன்பே அதைப் பற்றி அங்கு ஏற்கெனவே படித்த மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு சேர வேண்டும். கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியுடன் நீங்கள் படித்து வெற்றி பெறும் போது கட்டாயம் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

சிவில், ஐடி வேலை வாய்ப்பு

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் உள்ளது. எந்தப்படிப்பில் சேர்ந்தாலும் நீங்கள் காட்டும் ஆர்வமும் அக்கறையும்தான் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும்.
மத்திய அரசு ஸ்மார்ட்டி சிட்டி, நதிகள் இணைப்பு போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சிவில் என்ஜீனியரிங் படிப்பவர்களுக்கு இன்னும் 20வருடத்திற்கு வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதில் ஐயமில்லை. டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதால் ஐடி படித்த மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளது

நல்ல எதிர்காலம்

டிப்ளமோ படித்துவிட்டு என்ஜீனியரிங் சேர்வதும் நல்லதுதான். ஏனென்றால் டிப்ளமோ கோர்ஸில் படித்தவற்றை சற்றே விரிவாக இதில் படிக்கும் போது அவர்களுக்கு நன்றாக புரியும். பி.இ இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்நது படிக்கலாம். படித்து முடித்துவிட்டு பின்பு மேற்படிப்பு படிப்பதும் அவசியம். ஏனென்றால் சர்வதேச நிறுவனங்கள் 15க்கும் மேல் இந்தியாவில் செயல்பட்டுவருகிறது. அந்த நிறுவனங்கள் இந்திய மாணவர்களை நம்பி உள்ளதால் அதற்கேற்றாற்போல் அவர்களின் தரம் உயர்த்தப்படுவதும் அவசியமாக உள்ளது. நன்றாகப் படிப்பவர்களுக்குக் கட்டாயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

English summary
The discipline of engineering is extremely broad and encompasses a range of more specialized fields of engineering, each with a more specific emphasis on particular areas of applied science, technology and types of application.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia