போடியில் ரூ.419 கோடியில் நவீன அரசு பொறியியல் கல்லூரி.. முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்!

Posted By:

சென்னை: ரூ.419 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு பொறியியல் கல்லூரியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அதிநவீன முறையில் கட்டப்பட்ட இந்தக் கல்லூரியை சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

போடியில் ரூ.419 கோடியில் நவீன அரசு பொறியியல் கல்லூரி.. முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்!

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 947 சதுர அடி கட்டடப் பரப்பில் கல்வி நிர்வாகக் கட்டடங்கள், மாணவ மாணவியர் விடுதிகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிதாக இந்த அரசு பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளன.

காணொளிக் காட்சி முறை மூலம் முதல்வர் ஜெயலலிதா புதிய கல்லூரியைத் திறந்துவைத்தார்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அரசு பொறியியல் கல்லூரியைத் திறக்கவேண்டும் என்ற நோக்குடன் கல்லூரிகள் கட்ப்பட்டு திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தக் கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்துள்ளார். இதன்மூலம் ஏழை மாணவ, மாணவிகள் இந்த பொறியியல் கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் படிக்க இயலும். கேபிடேஷன் கட்டணம், நன்கொடை பயமின்றி மாணவர்கள் இந்தக் கல்லூரியில் சேர முடியும்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இந்தக் கல்லூரியைத் திறந்து வைத்ததற்கு தேனி மாவட்ட மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

English summary
Chief Minister Jayalalithaa on Friday inaugurated the Government Engineering College in Bodinayakanur in Theni district. The institution, set up at a cost of nearly Rs. 55 crore, was inaugurated via video conferencing at the Secretariat, an official press release said. Additionally, the Chief Minister launched new buildings in various colleges, amounting to nearly Rs. 420 crore and new buildings at various universities at a cost of Rs. 13.73 crore.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia