பொறியியல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.. கவுன்சிலிங் குறித்த முழு விவரம் வெளியீடு

Posted By:

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று முதல் துவங்கியுள்ளது இந்த விநியோகம் தமிழகம் முழுவதும் உள்ள 60 மையங்களில் நடைபெறும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்ப விநியோகத்தினை துவங்கி வைத்த துணைவேந்தர் ராஜாராம் பொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்களை வெளியிட்டார்.

பொறியியல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.. கவுன்சிலிங் குறித்த முழு விவரம் வெளியீடு

அதன்படி, மே 27ம் தேதி வரையில் மற்ற மையங்களில் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும். அண்ணா பல்கலைக்கழகம் சென்னை அண்ணா பல்கலையில் மட்டும் மே 29ம் தேதி வரையில் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் மே 29. ரேண்டம் எண் ஜூன் 15ல் வெளியிடப்படும்.

பொறியியல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.. கவுன்சிலிங் குறித்த முழு விவரம் வெளியீடு

மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையிலான ரேங்க் பட்டியல் ஜூன் 19ல் வெளியிடப்படும். மேலும், ஜூன் 28ல் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்கும். ஜூன் 29 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மேலும், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 1 முதல் துவங்கி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

பொறியியல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.. கவுன்சிலிங் குறித்த முழு விவரம் வெளியீடு

மேலும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், இதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தயாராக உள்ளதாகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது.

English summary
Chennai Anna university started to issue the Engineering application to the students today onwards.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia