உள்நாட்டு கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்துங்கள்: பிரணாப்

Posted By:

சென்னை: உள்நாட்டில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறமையாளர்களை கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜாரிபாகில் நடைபெற்ற 7-வது வினோபா பாவே பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பிரணாப் பேசியதாவது:

உள்நாட்டு கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்துங்கள்: பிரணாப்

ஜார்க்கண்ட் மாநிலம் இயற்கை வளங்கள் கொண்ட மாநிலம். இங்கு ஏராளமான என்ஜினீயரிங், ஸ்டீல் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் இங்குள்ள பல்கலைக்கழகங்களில் படித்து வரும் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.

கல்லூரிகளில் திறமையாளர்களாகத் திகழும் கண்டுபிடிப்பாளர்களை அக்கல்லூரி நிர்வாகங்கள் பாராட்டி ஊக்குவிக்கவேண்டும்.

உள்நாட்டு கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்துங்கள்: பிரணாப்

இதன்மூலம் ஏராளமான விஞ்ஞானிகள் உருவாவார்கள். வருங்காலத்தில் தொழிற்சாலைகளுக்கு ஏராளமான திறமையாளர்கள் கிடைப்பார்கள்.

நாட்டில் உற்பத்தியாகும் இரும்பில் 28 சதவீதம் ஜார்க்கண்டிலிருந்துதான் கிடைக்கிறது.

உள்நாட்டு கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்துங்கள்: பிரணாப்

ஜார்க்கண்டில் தொழில்துறைக்கு ஊக்கம் அளிப்பதன் வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றார் அவர்.

நிகழ்ச்சியின்போது முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு டி.லிட். பட்டத்தை பிரணாப் வழங்கினார்.

English summary
President Pranab Mukherjee today asked educational institutions to encourage local talent of innovation and it should be supplemented by the industry to achieve a marketing value.Addressing the 7th Convocation of the Vinoba Bhave University here, he said Jharkhand is rich in mineral resources and has a number of engineering and steel industries, which should back the efforts made by the colleges and universities to nurture talents."Local talent of innovation would have to be encouraged by educational institutions and supplement it by the industries to create a marketing value," Mukherjee, who is on a two-day visit to Jharkhand, said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia