கல்வி உதவித் தொகை பெறுவதில் சிக்கலா? இ-மெயில் மூலம் கம்ப்ளெயிண்ட் அனுப்பலாம்!!

Posted By:

சென்னை: மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறும்போது ஏற்படும் பிரச்னைகள் குறித்து புகார்களை இ-மெயில் மூலம் அனுப்பும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் உயர் கல்வி பெறுவதற்கு வசதியாக கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நாடு முழுவதும் வழங்கிவருகிறது.

கல்வி உதவித் தொகை பெறுவதில் சிக்கலா? இ-மெயில் மூலம் கம்ப்ளெயிண்ட் அனுப்பலாம்!!

இவற்றைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள், குறைபாடுகள் குறித்த புகார்களை scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.

இந்த நிலையில், மத்தியப் பிரிவு கல்வித் தொகைகள் குறித்த புகார்களை schol-mhrd@gov.in என்ற மின்னஞ்சலுக்கும், ஏஐசிடிஇயின் கல்வி உதவித் தொகை தொடர்பான புகார்களை pgscholarship@aicte-india.org என்ற மின்னஞ்சலுக்கும், யுஜிசி கல்வி உதவித் தொகை தொடர்பான புகார்களை ugcfellowship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
The HRD department has announced that the Email facility was launched for scholarship complaints. From now onwards students can complaint about the scholarship problems.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia