மின்வாரியத் தேர்வுகள்: மறுதேதி அறிவித்தது அண்ணா பல்கலை.!

Posted By:

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்கான நடைபெறும் தேர்வுக்கான மறுதேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தேர்வுகள் ஏற்கெனவே மே 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், இந்தத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் அவற்றுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்வாரியத் தேர்வுகள்: மறுதேதி அறிவித்தது அண்ணா பல்கலை.!

தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஜூன் 19-ஆம் தேதியும், இளநிலை உதவியாளர், வேதியல் பரிசோதகர், களப்பணி உதவியாளர் (பயிற்சி) சுருக்கெழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதியும், இளநிலை உதவியாளர் (நிர்வாகம்), தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல், இயந்திரவியல்) ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதியும் தேர்வு நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட 6 பதவிகளுக்கு 31 மையங்களில் நடைபெறுவாக இருந்த தேர்வு 8 மையங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மையங்கள் குறித்த விவரங்கள், தேர்வுக்கான கால அட்டவணை ஆகியவற்றை www.tangedco.gov.in, tangedco.directrecruitment.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இத்தகவல் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Anna university has announced electric board exam dates. For more details Aspirants can logon into www.tangedco.gov.in, tangedco.directrecruitment.in.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia