மகாராஷ்டிரா மாநிலத்தில் 3-ம் பாலினத்தவருக்கு இலவச கல்வித் திட்டத்தை வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை அந்த மாநில அரசு வகுத்து வருகிறது. இதையடுத்து திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு முன்னெடுத்து வருகிறது.
நாட்டில் இறுதியாக 2011-ஆம் ஆண்டு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டு நடைபெற்று இருக்கவேண்டும். ஆனால் கரோனா பரவலால் மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப் போயுள்ளது.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நமது நாட்டில் மொத்தம் 4.8 லட்சம் மூன்றாம் பாலினத்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்வி அறிவு விகிதம் 56.1 சதவீதமாக உள்ளது.
அண்மையில் மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கை 2020ன்படி(என்இபி) திருநங்கைகள் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சமமான கல்வி உரிமையை மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்குமாறு மாநிலம் மற்றும் தேசிய கல்வி வாரியங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 3-ம் பாலினத்தவருக்கு (திருநங்கைகள்) மாநிலத்தில் உள்ள பொதுப்பல்கலைக்கழகங்கள் இலவச கல்வியை வழங்குவது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் மாநில உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கலந்து ஆலோசித்துள்ளார்.
அப்போது திருநங்கைகளின் கல்விக்கான முழு கட்டணத்தையும் பல்கலைக்கழகங்கள் தங்கள் தரப்பிலிருந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் தன் சார்ந்த கல்லூரிகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு இலவச கல்லூரி அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
இதன்மூலம் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் 3-ம் பாலினத்தவர்கள் எந்தவிதமான கல்விக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லாத நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு முன்னெடுத்து வருகிறது.
இந்தத் திட்டம் மகாராஷ்டிராவில் வசிக்கும் ஏராளமான 3-ம் பாலினத்தவர்கள் அதிக பயன் அடைய வாய்ப்புள்ளது. அவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உருவாகியுள்ளன.
இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினத்தாரை தற்போது அங்கீகரிக்க தொடங்கி உள்ளது. அவர்கள் அடையாள அட்டை, மற்றும் இதர சேவைகளைப் பெற மூன்றாம் பால் என தம்மை அடையாளப்படுத்துவதை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவில் இது ஒரு முக்கிய அரசியல் சமூக மாற்றமாக பார்க்கபபடுகிறது.


Click it and Unblock the Notifications












