புதுடெல்லி: ஆந்திர மாநிலம் ஹைதராபாதிலுள்ள தி இங்கிலிஷ் அண்ட் ஃபாரின் லேங்குவேஜஸ் பல்கலைக்கழகத்தில் (இஎஃப்எல்) பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிஏ ஹானரஸ் , எம்ஏ, பிஎச்டி படிப்புகள், ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் இங்கு வழங்கப்படும். 2016-17-ம் கல்வியாண்டுக்கான படிப்பாகும்.

பட்டப் படிப்பில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எம்ஏ படிப்பில் சேர, பிஏ படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஆங்கிலம், அராபிக், பிரெஞ்சு, ஜப்பான், ரஷியா, பத்திரிகையியல், மாஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
படிப்புக்கு ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யவேண்டும். விண்ணப்பங்களை ஏப்ரல் 18-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://www.efluniversity.ac.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
