2018 ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயாராகிவிடும்... கல்வி அதிகாரி தகவல்

Posted By:

சென்னை : மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பல வருடமாக மாற்றப்படாபத பாடத்திட்டங்களை மாற்ற ஏற்பாடுகளை செய்து வருகிறது என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திட்டங்களையும் மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்று அரசு அறிவித்ததுள்ளது.

2018 ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயாராகிவிடும்... கல்வி அதிகாரி தகவல்

பாடவாரியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க நிபுணர்கள் தங்கள் பெயர்களை www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது. ஜூன் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணிக்கு 821 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற ஜனவரி மாதத்துக்குள் தயாராகி விடும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி தெரிவித்துள்ளார். புதிய பாடத்திட்டங்கள் 2018-19-ம் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும். அதற்காக ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு பல்கலைக்கழக நிபுணர்களிடம் கலந்தாலோசித்து பல புதிய மாற்றங்களை ஏற்படுத்த உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

புதிய கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் வருகின்ற மாற்றங்கள் மாணவர்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையிலும், தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் அமைந்து மாணவர்களுக்கு பயன் அளிக்கும் விதத்தில் அமைய வேண்டும்.

English summary
Above article mentioned about Educational officer informs new curriculum will be ready by January 2018.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia